இந்நிலையில் நேற்று நடந்த முதல்நாள் ஆட்டத்தில் ஒரு வித்தியாசமான ஒரு சம்பவமும் நடந்தது. அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா விராட் கோலியுடன் உரையாடிய சில விஷயங்களை பேசியது அங்குல ஸ்டெம் மைக்கின் மூலம் தொலைக்காட்சியில் கேட்டது. அது சம்மந்தமான வீடியோ பதிவு சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருந்தது.

விராட் கோலி ஜோஷ்வா உரையாடல் :
அந்த உரையாடலின் போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் விராட் கோலியிடம் : நீங்கள் இந்த போட்டியில் சதம் அடியுங்கள் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி : என்னுடைய சதத்தினை காண நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்.உடனே விக்கெட் கீப்பரும் : எனக்கு தெரியும் கண்டிப்பாக நீங்கள் 100 ரன்கள் அடிப்பீர்கள் என்று கூறினார்.
அதோடு விராட் கோலியிடம் : எனது அம்மா உங்களது பேட்டிங்கை காண மைதானத்திற்கு நேரில் வருவதாக போன் செய்து சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை நிச்சயம் அவர்களுக்காக நீங்கள் சதம் அடிக்க வேண்டும் என விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜோஷ்வா தாய் சந்திப்பு :
இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விகேட்கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய் விராட் கோலியுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அவரை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்
இந்நிலையில் இந்த சந்திப்பு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விகேட்கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய் கரோலின் பேசுகையில் – எங்களுடைய காலத்தில் விராட் கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எங்களுடைய மண்ணில் அவர் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் விராட் கோலியுடன் என்னுடைய மகன் மைதானத்தில் விளையாடுவது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.
Virat Kohli is once in a life time sportsperson.
— Johns. (@CricCrazyJohns) July 22, 2023
The respect, he has earned over a decade, What a beautiful video. pic.twitter.com/bDhizasC6U
மேலும் கண்கலங்கிய அவர் கூறுகையில் விராட் கோலி சதமடித்த தருணம் எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. விராட் கோலியை ரசிகர்களை பிடிப்பதற்கு அவர் காலத்தில் நடந்து கொள்ளும் விஷயம், கிரிக்கெட்டை புரிந்து கொள்ளும் விஷயம், அவருடைய பொறுமை என ஏராளமானது இருக்கிறது. அவரிடம் என்னுடைய மகன் பல விஷியங்களை கற்றுக்கொள்வார் என்று தான் நினைப்பதாக கூறினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விகேட்கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அற்புதமாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்கில் 438 ரன்களை விளாசியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது விளையாடி வரும் நிலையில் 1 விக்கெட்டை இழந்த 86 ரன்களை விளாசியுள்ளது.





