தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. ஐபிஎல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாளை குவாலிபயர் 1 நடக்க இருக்கிறது . இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கின்றனர். அதற்கடுத்து எலினேடர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத இருக்கின்றது. எனவே இந்த இரு அணிகளை தவிர்ந்து மீதமுள்ள அணிகளில் உள்ள மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

அப்படியொரு நிலையில் தான் நேற்று ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணியின் முன்னாள் முன்னாள் கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் நாளை மே 23அன்று இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் கோலியுடன் ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் நாளை இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருவதினால் இவர் உள்பட இஷான் கிஷன், அஜிங்க்யா ரஹானே, ஷுப்மான் கில் மற்றும் முகமது ஷமி உட்பட பலர் ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் உடனடியாக இங்கிலாந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி இறுதி செய்யப்படவில்லை என்றாலும் வரும் WTC தொடங்க சில நாட்களே இருப்பதினால் விரைவில் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் அணி ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில் WTC தொடருக்கு தேவையான பயிற்சியை இதன் முலம் பெற முடியும். மேலும் இவர்களுடன் முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அனிகேத் சவுத்ரி மற்றும் யர்ரா பிருத்விராஜ் உள்ளிட்ட வீரர்களும் இங்கிலாந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் சசெக்ஸை அணியை வெளிநடத்தி வரும் நிலையில் WTC போட்டிக்காக அவர் இடையே வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் காயம் காரணமாக சில போட்டிகள் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் தற்போது உடல் தகுதி பெற்றிருப்பதாகவும் இவர்களின் இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான WTC தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி நக்கும் நிலையில் இந்திய அணியின் வீரர்கள் அதற்கு தேவையான பயிச்சியில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்பதினால் ஒரு வேளை மும்பை அணி எலிமினேட்டர் தொடரில் தோல்விபெறும் பட்ச்சத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதற்கு அடுத்த நாளே இங்கிலாந்து செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.





