வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடினர். எள்ளலும் தன்னுடை 500வது சர்வதேச போட்டியில் சதத்தையும் விளாசினார். இந்நிலையில் அந்த டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியிடம் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவா தன்னுடைய தாய் உங்களை பார்க்க வருகிறார் என்றும், அவர் உங்களுடைய ரசிகர் என்று கூறிய வீடியோ வைரலான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவாவின் தாய் கரோலின் விராட் கோலியை நேரில் சந்தித்தார்.

மேலும் இது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் உணர்ச்சி வசமாக பேசியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர் விராட் கோலி குறித்து RavSportz ஊடகத்தில் பேட்டி கொடுத்தார்.
கரோலின் கொடுத்த பேட்டி :
இது எங்களுக்கு ஒரு கனவு உண்மையானது போன்றது. எப்போதாவது உண்மையாகிவிட்டால் அந்த தருணத்திற்கு சாட்சியாக இந்தியாவில் இருப்போம் என்று நினைத்தோம். கிரிக்கெட் இங்கே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் பல மேற்கு இந்தியர்கள் கலந்து கொண்டு விளையாடும் நிலையில் ஜோசுவாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது மியாகவும் அருமையாக இருக்கிறது என்றார் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவாவின் தாய் கரோலின்.
ஒரு பேட்டியில் பேசிய அவர் கூறுகையில் “விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். இருந்த போதிலும் ஒரு தாய்க்கு தன்னுடைய மகன் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசை வருகிறாரோ அந்த வகையிலும் விராட் கோலி சிறந்தவராக இருக்கிறார். அவர் சரியான குடும்ப தலைவர் மட்டுமல்லாமல் நல்ல மகனும் கூட என்றார் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவாவின் தாய் கரோலின்.
It was a special moment when @imVkohli met @joshuadasilva08's parents!
— RevSportz (@RevSportz) July 25, 2023
And now @debasissen visits the Silva family as an invitee as a thanking gesture!
Can we see Joshua play for @RCBTweets one day alongside his idol?
What did Joshua's parents say to us? 👇👀@Wowmomo4u pic.twitter.com/AXXzp7huti
மேலும் பேசும் அவர் இது எங்களுக்கு ஒரு கனவு உண்மையானது போன்றது. எப்போதாவது உண்மையாகிவிட்டால் அந்த தருணத்திற்கு சாட்சியாக இந்தியாவில் இருப்போம் என்று நினைத்தோம். கிரிக்கெட் இங்கே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் பல மேற்கு இந்தியர்கள் கலந்து கொண்டு விளையாடும் நிலையில் ஜோசுவாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது மியாகவும் அருமையாக இருக்கிறது என்றார்.

அதோடு தன்னுடையமகன் பற்றி பேசுகையில் “அவர் மிகவும் அதிகமாக பேசமாட்டார். ஆனால் விளையாட்டின் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார். அதே போன்று அவர் விராட் கோலியின் மீதும் அதிக மதிப்பை வைத்திருக்கிறார். அதனால் தான் விராட் கோலி 100 ரன்களை அடிக்க வேண்டும் என்று என்னுடைய மகன் விரும்பினார் என்றார் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோஷுவாவின் தாய் கரோலின்.





