டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டின் 2 ஆம் நாளில் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் 229 ரன் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வால் எடுத்த 143 ரன்கள் மூலம் இந்தியா 312/2 என 2வது நாளை முடிந்தது. மேலும் ஜெய்ஸ்வால் இப்படியே தொடர்ந்து விளையாடினால் உலக கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படிப்பார். இதனிடையே தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறுவயது பயிற்சியாளர் ஜவாலா சிங் பாராட்டி பேசியுள்ளார்.
அவர் பேசுகையில் “ஜெய்ஸ்வால் வளர்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நன்றாகத் தொடங்குவார் என்று எனக்கு மும்பே சில உணர்வு இருந்தது. அவர் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான்கு நல்ல பருவங்களில் விளையாடியுள்ளார். மேலும் அவர் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களில் பெரும்பாலோரை நிறைய அழுத்தத்தின் கீழ் எதிர்கொண்டு விளையாடியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் என்றார் ஜவாலா சிங்.

ஜெய்ஸ்வாலின் புத்திசாலித்தனமான தொடக்கத்தில் ஜவாலா மகிழ்ச்சியடைந்த அவர் மேலும் பேசுகையில் “இது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர் அதை எளிமையாக வைத்திருக்க வேண்டும். ஒரு வீரராக அணிக்கு உங்களால் முடிந்ததைச் செய்வது முக்கியம். அணிக்காக ரன்கள் எடுப்பது எந்தவொரு வீரருக்கும் முக்கியமான ஒரு வேலை, அதற்கு பிறகுதான் நம்மை பற்றி யோசிக்க வேண்டும் என்று மேலும் கூறினார் ஜவாலா சிங்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றிய தகவல் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி சொல்லவேண்டும் என்ற அவர் சாதரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பகுதிநேர பானிபூரி கடையில் வேலை பாதி நேரம் ஆசாத் மையத்தில் கிரிக்கெட் பயிற்சி என இருந்த வந்த இவரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார். அதற்கு பிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருக்கிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைனர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டியிலும் தற்போது கலக்கி வருகிறார்.





