கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. அது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தற்போது உலக கிரிக்கெட்டில் இந்திய அணியானது முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் வெற்றியின் 40வது ஆண்டு விழாவானது நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது இருந்த முன்னாள் பலரும் கலந்து கொண்டு அந்த நினைவை நினைவு கூர்ந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் அப்போது தோல்வியடைந்த 2முறை உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெற்றுத்தந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான கிளைவ் லாயிட் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில், இந்தியாவின் அந்த உலக கோப்பை வெற்றி எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “இந்திய அணியை அப்போது 183 ரன்களுக்கு சுருட்டியது எங்களுடைய பந்துவீச்சளர்களின் நல்ல முயற்சி. பொதுவாக அந்த மாதிரியாக ஸ்கோரை எங்களினால் சுலபமாக வீழ்த்த முடியும். ஆனால் இது கிரிக்கெட், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்த போதிலும் அது நல்ல முயற்சி என்று தான் நான் கூறுவேன். இந்தியாவின் அந்த வெற்றியானது அவர்களின் கிரிக்கெட்டின் அடிப்படையையே வித்தியாசமான ஒன்றாக மற்ற உதவியது.

உலக கிரிக்கெட்டும் இந்த மாற்றத்தினால் பயனடைந்தது. என்னதான் நாங்கள் 1983ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவை வீழ்த்தினாலும், எங்களுக்கு அப்போதே தெரியும் இந்தியா கிரிக்கெட் உலகில் தலைசிறந்தவர்களாக வருவார்கள் என்று. உலகக் கோப்பை வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்குக் கொடுத்த தன்னம்பிக்கை சிறிது கிடையாது. அது வளரும் கிரிக்கெட் வீரர்களையும் ஊக்குவித்தது என்றால் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வென்ற சர்வதேச கோப்பைக்கு பிறகு இந்திய அணி எந்த கோப்பையையும் வெல்லாத நிலையில் அது விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் “உங்களினால் அரையிறுதிக்கு செல்ல முடிந்தால் கண்டிப்பாக இறுதி போட்டிக்கும் செல்ல முடியும். ஏனென்றால் உங்களினால் பல இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற முடிந்தது.

இப்போது ஐபிஎல் நடைபெறுவதால், எதிர்காலம் இந்தியாவுக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவீர்கள் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் அற்புதமான டெஸ்ட் பக்கம் உங்களிடம் இருக்கிறது. எனவே பெரிய போட்டியை வெல்வதற்கு இதுசாரியான் காலம் என்று நினைக்கிறேன். வாழ்கை ஒரு வட்டம், எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது உறுதி என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்.



