இந்தியாவின் நவீன கால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஸ்பின் பவுலராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரியவர். பல போட்டிகளில் முக்கியமான விக்கெட்டுகளை இந்திய அணிக்காக எடுத்து கொடுத்திருக்கிறார். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்துவீச்சில் சிறப்ப செயல்பட்டிருக்கிறார்.

2022 T20 உலக கோப்பை INS vs PAK :
அந்த வகையில் கடந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது மெல்பெர்ன் கிரிக்கெட் மைத்தனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி திரிலிங் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை விளாசியது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு மோசமா தொடக்கம் கிடைத்து ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், சூரிய குமார் யாதவ், அக்சர் பட்டேல் போன்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற விராட் கோலி நங்குறமாக நின்று விளையாடினார்.
கிட்டத்தட்ட தோல்வியடையும் இடத்தில் இருந்த இந்திய அணியை 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தார். ஆனால் இந்த போட்டியின் கடைசி ஓவரில் 5 வது பந்தில் இயந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் தினேஷ் காத்திக் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய அஸ்வின் இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்நிலையில் இன்று ஐசிசிக்கு அவர் அளித்த பேட்டியில் அந்த போட்டி குறித்து நினைவு கூர்ந்தார்.

அஸ்வின் அளித்த பேட்டி :
அந்த போட்டியின் போது கடினமான வேலையைச் செய்யச் சொன்னதற்காக நான் தினேஷ் கார்த்திக்கைத் திட்டினேன். மைத்தனத்திற்குள் நுழைந்ததும் ரசிகர்களின் ஆராவாரம் அப்படி இருந்தது. அந்த ஒரு பந்தை விளையாடுவதற்கு விராட் எனக்கு ஏழு வகையான ஷாட்டுகளின் அதனை விளையாட வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த எல்லா ஷாட்களையும் என்னால் மட்டுமே விளையாட முடிந்தால் நான் ஏன் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய போகிறேன் என்று நினைத்தேன்.
View this post on Instagram
அந்த நேரம் நான் எந்த ஷாட்டை ஆடுவது என்று யோசித்து கொண்டிருக்கும் போது விராட்டைப் பார்த்தேன் அவரது கண்கள் ஈர்ப்பது போன்று இருந்தது. அவர் வேறு கிரகத்தில் இருப்பதை போன்று இருந்தது. அதனால் சரி நான் பூமிக்கு வரட்டும் என்று சொல்லிக்கொண்டேன். கடைசி பந்தின் போது வைட் பால் வீசிய தருணத்தில் நான் போட்டியில் வென்றுவிட்டேன் என்று எனக்குத் தெரிந்தது.
அதனால் கடைசி பந்தில் என்னை நான் ஊக்குவித்து கொண்டு அடித்தேன். சமூக ஊடகங்களில் அந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் பந்து என்னுடைய பேடில் பட்டால் என்ன நடந்திருக்கும் என்று நான் நினைத்திருக்கிறேன். எனக்கு தெரிந்து அந்த போட்டி என்னால் முடிய வேண்டும் என்று இருந்திருக்கிறது. அந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. நான் பார்த்த மற்றும் ஒரு பகுதியாக இருந்த சிறந்த விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும் என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.





