மஹேந்திர சிங் தோனி என்ற பெயரை இன்று இந்தியாவில் யாரிடம் கேட்டாலும் தெரியாத நபர் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த அள்விற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் எம்.எஸ்.தோனி. இந்தியாவிற்காக மூன்று உலக கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமையும் தோனியையும் சேரும். உலக கிரிக்கெட் மட்டுமால்லாமல் இந்தியாவில் விளையாடப்படும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாகவும் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் கூட பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதினால் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தல என்று அன்போடு அழைக்கின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி இந்த வருடம் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொண்டு இளம் வீரரான ருதுராஜ் கெய்க்குவாட்டிற்கு வழி விட்டார். மேலும் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அப்படி கடைசி சீசனாக இருக்கும் பட்சத்தில் தோனி இந்த ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவார். இதனாலேயே தோனி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். மேலும் அவர் ஒரு பந்து விளையாடினாலும் கூட போதும் என்று அவருக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தோனி குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறியதாவது “ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதைத் தவிர அழுத்தில் இருக்கும் ஒரு கேப்டனாக தோனியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அழுத்தம் உள்ளுக்குள் இருந்திருக்கலாம் என்றாலும் அந்த அழுத்தத்தை அவன் முகத்தில் காணவில்லை. அவர் எப்போதும் அமைதியாக இருப்பார், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவர் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

அவரது கட்டுப்பாடு ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் தோனியிடம் ஏதோ திட்டம் இருப்பதாகவும், ஏதாவது செய்து முடிப்பார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பார்வையாளராக போட்டி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் போது தோனியின் பதற்றம் இல்லாத முகத்தைப் பார்க்கும்போது ஏதோ நடக்கும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இதுவே அவரது சிறப்பு என்றார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான்.
View this post on Instagram
மேலும் இதனை தொடர்ந்து பேசிய நடிகர் பிரியாமணி கூறுகையில் “அவர் எங்கே விளையாடினாலும் சிறப்பாக விளையாடுவார், அவர் தன்னிடம் இருக்கும் எதையும் மாற்ற தேவையில்லை என்று கூறினார். அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.





