இந்தியா விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணமானது தொடங்க இருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாட ஏற்கனவே வீரர்கள் அங்கு சென்று பயிற்சியெடுத்து வரும் நிலையில் சில மூத்த வீரர்களுக்கும் ஓய்வும், சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியானது நாளை டொமினிக்கா மைத்தனத்தில் நடைபெற இருக்கிறது.

இதனிடையே இந்த சுற்றுப்பயணத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடினாலும் சரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனிடையே தான் இந்த தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி குறித்து பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக்.
பிராட் ஹாக் கூறியது :
அவர் கூறுகையில் “இந்திய வீரர் பாண்டியாவின் பேட்டிங் சிறப்பாக இல்லை, அவர் கொஞ்சம் கொஞ்சம் பேட்டிங்கில் சிரமப்படுகிறார், ஆனால் அவர் திறமை பெற்றுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் அதை கடந்த காலத்தில் வெளிப்படுத்தினார். அர்ஷ்தீப்புக்கு இது ஒரு மிக முக்கியமான தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படமுடியாத காரணத்தினால் அவருக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தோர் மிகவும் முக்கியமானது.

அவருக்கு இந்த இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடரானது ஒரு படமாக இருக்கும். வேகத்தை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர் உணர்வார். உம்ரான் மாலிக் 2021 ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் நெட் பவுலராக இருந்து அணி உறுப்பினராக பதவி உயர்வு பெற்ற பிறகு மிகவும் சிறப்பாக செயல்பட்டார். டேல் ஸ்டெய்னின் பயிற்சியின் கீழ் அவர் கடந்த ஆண்டு உம்ரான் மாலிக்கிற்கு அற்புதமான தொடராக இருந்தது.

மேலும் சமீபத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்ற பிறகு டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதில் பல புது வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரின்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நல்ல வீரர்கள் இடம்பெறவில்லை. இடுந்த போதிலும் அவர்களுக்கு அடுத்து வரும் தொடர்களில் வாய்ப்புகள் கண்டிப்பாக வழங்கப்படும் என்று கூறப்படுள்ளது.
தேர்வு குழு குறித்து :
தேர்வாளர்கள் இந்த செயல் வரும் உலகக்கோப்பை 2024 டி20 தொடருக்கான ஏற்பாடுகள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பேட்டியில் தேர்வாளர்கள் மாற்றியும் பேசிய பிராட் ஹாக் கூறுகையில் “தேர்வுக்குழுவினர் நகர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், அவர்கள் இளைஞர்களுகு வாய்பளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்க விரும்புகிறார்கள் மேலும் இவை டி20 உலகக் கோப்பையுடன் முன்னோக்கி நகரும் வாய்ப்புகள் என்று மேலும் தெரிவித்தார் பிராட் ஹாக்.





