சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியானது நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. இதற்க்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது வீரர்கள் சரியாக தயாராகவில்லை என்றும், டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த்து, நவீன கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் ஜாம்பவானாக கருதப்படும் அஸ்வினை அணியில் இருந்து தூக்கியதும் தான் என்று கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்தது. அதனை தொடர்நது சர்ச்சையான முறையில் விராட் அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகினார். அதற்கு பிறகு ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்த உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பல காரணம் இருந்தாலும் அஸ்வின் விளையாடாதது பெரிதாக பேசப்பட்டது. ஏனென்றால் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர். அதோடு ஆல்ரவுண்டர்களில் 2 வது இடத்தில் இருக்கிறியார். மேலும் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார் அவர் இதுவரையில் 474 விக்கெட்டுகளை வீழ்த்திஇருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான தேவங் காந்தி அஸ்வின் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு ஏன் அஸ்வின் கேப்டனாக வரக்கூடாது? ஒருவேளை வெளிநாடுகளில் அவர் முக்கியமற்ற வீரராக இருக்கிறார் என்று நீங்கள் கூறினால் ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக இருந்த ரகானே விளையாடும் 11 பேர் அணியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்துப் பாருங்கள். எனவே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அஸ்வின் அல்லது ரகானேவை தற்காலிகமாக நியமிக்கலாம்.
மேலும் சுப்மன் கில் வரும் காலங்களில் அணியில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்துவார் என்று நம்பலாம்” என்று கூறினார். மேலும் இங்கிலாந்து மற்றும் கவுண்டி தொடரில் விளையாடி சிறப்பான பார்மில் இருந்து உலக கோப்பை இறுதி போட்டியில் சில மோசமான ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழந்த புஜாராவை இன்னமும் நம்பாமல் ஐபிஎல் போட்டியில் சிற்பபாக விளையாடிய ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அது குறித்து அவர் பேசுகையில் “அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருவேளை புஜாரா ரன்கள் அடித்தால் அதன் பின் டிசம்பர் வரை எந்த டெஸ்ட் தொடரும் இல்லாததால் அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் இந்திய அணியில் காலத்தை தள்ளி விடுவார். எனவே அந்த தவறை செய்யாமல் நேரடியாக ஜெயஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பெரிய போட்டிகளுக்கு முன்பாக தயார்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் முன்னாள் இந்திய அணியின் தேர்வுகுழு உறுப்பினர் தேவங் காந்தி கூறினார்.





