சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுளை தேர்ந்த அணிகள் களமிறங்குகிறது. மேலும் இவர்களோடு உலகக்கோப்பை தகுதி சுற்றில் வெற்றி பெரும் இரண்டு அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது.

மற்ற உலகக்கோப்பை போட்டிகளையும் போல இந்த உலகக்கோப்பை போட்டியும் அணைத்து அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது, ஏனென்றால் இந்தியாவில் இந்த போட்டி நடத்தப்பட்டாலும் ஐபிஎல் போட்டியில் பல நாடுகளை சேரத்த வீரர்கள் விளையாடுவதினால், இங்குள்ள மைத்தனத்தின் நிலைமை குறித்தும் எப்படி இங்கு செயல்படவேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இதனால் இந்தியாவிற்கு இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும்.
மேலும் இந்த போட்டிகளுக்கு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் இந்தியா vs பாஸ்கிதான் போட்டிகள் எங்கே நடக்கும் என்ற குழப்பம் இதுவரையில நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் முதன் முறையாக உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஒரு அற்புதம் நடந்துள்ளது.
The ICC Men's @CricketWorldCup Trophy Tour 2023 was launched on a stratospheric scale 😍
— ICC (@ICC) June 27, 2023
Countdown to cricket’s greatest spectacle has begun 🏆
More ➡️ https://t.co/UiuH0XANRh#CWC23 pic.twitter.com/Z67H8DAe6c
அதாவது உலகக்கோப்பையானது பூமியின் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 120000 அடி உயரத்திற்கு ஏறக்குறைய ஸ்ரேடோஸ்பியர் அடுக்கின் எல்லைக்கு சென்று வந்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து “ஸ்ரேடோஸ்பியரிக்” பலூன் மூலம் 1 லட்சத்தி 20 ஆயிரம் அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட்டது. இங்கு காற்றும் அழுத்தமான மிகவும் குறைவு.
மேலும் இங்கு வெப்பநிலையானது சுமார் – 65 டிகிரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உலகக்கோப்பை இருக்கும் இடத்தை 4டி தொழில்நுடப் கேமராவின் மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 100 நாட்கள் இருக்கும் இந்நிலையில் இன்று இந்தியாவின் அதிக செலவில் உருவாக்கபப்ட்ட நடேந்திர மோடி மைதானத்தில் தரையிறக்கபப்ட்டது. அந்த விடியோவை ஐசிசி பகிர்ந்ததை அடுத்து சோசியல் மீடியாவில் அந்த விடியோவானது வைரலாகி வருகிறது.
மேலும் நரேந்திர மோடி மைத்தனத்தில் தரையிறக்கப்பட்ட உலககோப்பையானது அடுத்தாக பஹ்ரைன், மலேசியா, நைஜீரிய, இத்தாலி, பிரென்ஸ், குவைத், அமெரிக்க உள்பட 18 நாடுகளில் இருக்கும் 40 க்கும் அதிகமான நகரங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதனை தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி மீண்டும் கோப்பையானது இந்தியாவிற்கு திரும்புவது குறிப்பிடதக்கது.




