இன்று அரையிறுதி போட்டியானது தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய ஏ அணி பகங்ளாதேஷ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியாது பந்துவீச்சை தேர்வு செய்தது. சமீப ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா A அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும் 24 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு பிறகு வந்த அதிரடியாக விளையாடும் அபிஷேக் ஷர்மா அதிக பந்துகள் நீடித்தாலும் அவரும் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 34 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த CSK அணியின் நிஷாந்த் சிந்து 5 ரன்களிலும் ரியான் பராக் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, துருல் ஜூரல் 1 ரன்னிலும், ஹங்கர்கேகர் 15 ரங்களிலும் மனோவ் சதர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணிக்கு அழுத்தம் கூடியது.
ஆனால் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ மறுபக்கம் பொறுமையாக விளையாடிய யாஷ் தூல் நங்கூறமாக நின்று 85 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணிக்கு போராடக்கூடிய அளவாக 49.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டது என்றே நினைத்து விட்டனர்.

ஏனென்றால் முதல் விக்கெட் 70 ரன்களிலும் இரண்டாவது விக்கெட் 94 ரன்களிலும் விழுந்தது. இருந்த ஒருகட்டத்தில் பங்ளாதேஷ் வெற்றி பெற 32 ஓவர்கள் கையில் இருக்க 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் மட்டுமே தேவை என்றிருந்தது. ஆனால் அடுத்த 19 ஓவரில் இருந்துதான் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பித்தது. 19 ஓவரில் 3வது விக்கெட் விழுந்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தது.

மேலும் 32வது ஓவரில் இந்த வருடம் ஐபிஎல் சென்னை அணியில் எடுக்கபப்ட்ட நிஷாத் சிந்து அற்புதமாக பந்துவீசினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் தொடந்து ஆட்டமிழக்க இதனால் இந்திய ஏ அணியானது 34.2 ஓவர்களில் பங்ளாதேஷ் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய வெற்றி பெற்றது.
What an incredible comeback to seal a date with Pakistan in the final!
— FanCode (@FanCode) July 21, 2023
Yash Dhull & Co. 🫡#EmergingAsiaCup2023 #LIVEonFanCode pic.twitter.com/PQQjkOAEjV
அடுத்ததாக வரும் ஞாயற்று கிழமை நடக்கும் பைனல் போட்டியில் இந்தியா vs பாஸ்கிதான் அணிகள் மோதிக்கொள்வதினால் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.




