ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி விற்றது. கொல்கத்தா 179 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய குஜராத் சிறப்பாக விளையாடியது. பின்னர் கடைசி 5 ஓவர்களில் அதிகமான ரன்கள் தேவைப்படும் போது மில்லர் மற்றும் விஜய் சங்கர் இருவரும் சிறப்பாக ஆடி குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா மற்றும் ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளர் மற்றும் இந்தியா அணியின் முன்னாள் வீரருமான முரளி கார்த்தியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். நெஹ்ரா மற்றும் முரளி கார்த்திக் இருவரும் பல போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடி இருக்கின்றனர்.
இந்நிலையில் பல நாட்கள் கழித்து இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது திடீரென நெஹ்ரா பேசிக்கொண்டிருக்கும் முரளி கார்த்திக்கின் அடிப்பாகத்தில் காலில் முடியை கொண்டு அடித்தார். நெஹ்ரா இப்படி செய்வார் என்று சிறிதும் எதிர்பார்க்காத முரளி கார்த்திக் அப்படியே வழியால் கீழே சாய்த்தார். பின்னர் ஜாலியாக பேசிக்கொண்டே தடுமாறி முரளி கார்த்திக் நெஹ்ராவின் உதவியுடன் தடுமாறி எழுதார்.

வைரல் வீடியோ :
அப்போது நெஹ்ரா தாக்கியது போலவே முரளியும் தக்க முயற்சி செய்கையில் நெஹ்ரா ஓடி பெவிலியனில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கும் மைதானத்தில் பள்ளி குழந்தைகளை போல நெஹராவும் முரளி கார்த்திக்கும் விளையாடியது பலரது கவனத்தை ஈர்த்து. ஆனாலும் அந்த இடத்தில் அடிக்கலாமா என ரசிகர்கள் நெஹ்ராவை கலாய்த்து வருகின்றனர்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 29, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நேற்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் விளையாடிய நாட்களில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். பல போட்டிகளில் இந்திய அணிக்காக முன்னணி பந்துவீச்சாளராக செயல்பட்டார். தற்போது கிரிக்கெட் பயிற்சி உலகில் நுழைந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஆஷிஷ் நெஹ்ரா என்பது குறிப்பிடதக்கது.





