உலக உகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே போட்டியானது நடைபெற இருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட தோற்கவில்லை. மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பாகவே இந்த தொடர் முழுவதும் செயல்பட்டு வருகிறார்.

மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொஞ்சம் தடுமாற்றம் இந்த சீசனில் இருந்து வருகிறது. கடந்த சீசனின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கிடைத்த தோல்விக்கு பிறகு அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு 2 வெற்றிகளை மட்டுமே கிடைத்த நிலையில் புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு வெற்றி என்பது இந்த போட்டியில் தேவைப்படுகிறது.
அதே வேலையில் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 4 பெரிய அணிகளை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. நெட் ரன் ரோட்டிலும் +1.120 என அற்புதமான ஒன்றை கொண்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தங்களுடைய வெற்றிக்கணக்கை தொடரவே பார்ப்பார்கள்.

மேலும் இன்று இவ்விரு அணிகளும் போட்டியிலும் இடம் ராஜஸ்தான் என்பதினால் அவர்களுக்கு ஆதரவு என்பது அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் தான் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா குஜராத் அணி குறித்து பேசியுள்ளார். மேலும் அணியின் மற்றம் ஏற்படுமா என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எல்லவிதத்திலும் மிகவும் பலமான அணியாக இருந்து வருகிறது இதனால் அவர்களுக்கு வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் அனைத்திலும் சரியாக செய்து வருகின்றனர். நல்ல கிரிக்கெட் விளையாடுகின்றனர், அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் தோற்கவில்லை. ஆனால் குஜராத் அணி அப்படி குஜராத் அணி செய்யுமா என்று தெரியவில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகின்றனர். கிடைத்த சில தோல்விகளுக்கு பிறகு அவர்களது விளையாடும் 11பேர் கொண்ட அணியிலும், மனநிலையிலும் எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன். அவர்கள் நன்றாக திரும்பி வருவார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் சராசரி விதிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தப் போகிறது என்று நான் நினைக்கிறேன் என்றார் பிரையன் லாரா




