
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 40வது போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜரத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்க்கு முன் மோதிய போட்டியில் டெல்லி அணி தான் வெற்றி பெற்று இருந்தது. அது மட்டும் அல்லாமல் இந்த இரு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே தான் இருந்து வருகிறது.

குஜராத் அணி 6வது இடத்திலும் டெல்லி அணி 8 வது இடத்திலும் இருந்துஹ் வந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் பின் தான் அவருக்கு தெரிந்தது அது தவறான முடிவு என்று. ஆரம்பத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். ஆனால் அதன் பின் ரிஷப் பந்த் மற்றும் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர்.

டெல்லி அணியின் பேட்டிங் ஒரு கட்டத்தில் 150 ரன்களை எட்டுமா? என்ற கேள்வி இருந்தாலும் அதை இந்த இரண்டு வீரர்களும் மாற்றி அமைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களை குவித்து இருந்தது. இவ்வளவு பெரிய இமாலய ரன்களை குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் தான்.அதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 ரன்களையும் அக்சர் பட்டேல் 66 ரன்களையும் அடித்து இருந்தார்.
குஜரத் அணி சார்பில் வாரியார் 3 விக்கெட்டுகளையும் நூற் அகமது 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். குஜரத் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர் மோஹிட் ஷர்மா விக்கெட் ஏதும் எடுக்காமல் 73 ரன்களை அவர் விட்டு கொடுத்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 65 ரன்களும் மில்லர் 55 ரன்களையும் அடித்து இருந்தார்.சாஹா 39 ரன்களை அவர் அடித்து இருந்தார்.

கேப்டன் தனது 100வது போட்டியில் 6 ரன்னிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அவர் அளித்து இருந்தார்.டெல்லி அணி சார்பில் ரஷிக் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் நோர்கிய அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்து இருந்தார். எனவே டெல்லி அணி 4 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது





