விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அணி தன்னுடைய மைதானத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு பிறகுதான் பெரிய சம்பவம் ஓன்று நடந்தது. இந்நிலையில் தான் 17 வது ஓவரின் போது லக்னோ பேட்ஸ்மேன் நவின் உல் ஹக் மற்றும் விராட் கோலிக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது அம்பயர்களும் சக வீரர்களும் வந்து பெரிய வாக்குவாதம் ஏற்படாத வாறு இருவரையும் பிரித்து விட்டனர்.
அதற்கு பிறகு தோல்வியடைந்த லக்னோ அணியும் ஆர்சியி அணியின் பரஸ்பாரமாக கைகொடுப்பதற்கு சென்றது. ஆனால் அங்கேயும் விராட் கோலி மற்றும் நவின் உல் ஹக் வாக்குவாதம் நடந்தது. அப்போது நவின் உல் ஹக் விராட் கோலியை பிடிக்க முயன்றார். இந்த சம்பவம் ஓய்ந்த பிறகு லக்னோ அணியின் பேட்ஸ்மேன் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே கெளதம் கம்பீர் கைல் மேயர்ஸின் கைகளை பிடித்து கூட்டி சென்றார்.
No wonder no one likes him and his attitude in the current Indian team… Shame on #ViratKohli for being a senior player and
— Amitabh Chaudhary (@MithilaWaala) May 1, 2023
Fighting with a youngster.
He truly deserve what BCCI did to him 👍🏻 pic.twitter.com/JHLwAev3IA
அதற்கு பிறகு விராட் கோலிக்கும் கம்பீருக்கும் வாங்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த அனைவரும் அங்கு கூட கோலி மற்றும் கம்பீருக்கு இடையே வாங்குவாதம் முற்றுகையில் சக வீரர்கள் இந்த பிரச்னை மேலும் பெரிதாக வண்ணம் இருவரையும் பிரித்து அழைத்து சென்றனர். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ.
Fines for breaching the IPL Code Of Conduct yesterday:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2023
Virat Kohli – 1.07cr (100%).
Gautam Gambhir – 25 Lakhs (100%).
Naveen Ul Haq – 1.79 Lakhs (50%). pic.twitter.com/LTLwz0jF4K
அதே நேரத்தில் இந்த நிகழ்வினால் பிசிசிஐ விராட் கோலிக்கு சம்பளத்தில் இருந்து 100 சதவிகிதமாக 1.07கோடி ரூபாயும். இவரை போன்றே லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு 100 சதவிகிதம் அதவது 25 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோலியுடன் விளையாட்டின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன் ஹல் ஹகிற்கு 50 சதவிகிதம் 1.79 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.





