ஐபிஎல் 2023 க்கான 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெயிட்லி மைதானதில் எதிர்கொண்டன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர் தோல்வியில் இருந்து மீள இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் விளையாடி வந்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ராய் இருவருமே டெல்லி அணியின் பௌலிங்கை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு வந்த லிட்டன் தாஸ் 4 ரன்களிலே ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழக்க ஆரம்பம் முதலே தடுமாற்றதிலே இருந்த கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டை இழந்து வண்ணமே இருந்தன.
பின்னர் களமிறங்கிய அதிரடி நாயகன் ரிங்கு மற்றும் சுனில் நரைன் சொற்ப ரன்களிலே வெளியேறினார்கள். கொல்கத்தா அணியின் வீரர்கள் வந்த வேகத்திலே சென்றனர். ஜாசன் ராய் 43ரன்களில் வெளியேற, கடைசியில் ரஸல் சில சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார். ரஸல் 37 ரன்களை சேர்த்தார். iஇருப்பினும் 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா அணி.
— Ninja (@IPLcskMSD) April 21, 2023
இந்நிலையில் இந்த எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி போராடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இஷாந்த் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதற்கு பிறகு பேசிய அவர் “என்னுடைய வாய்ப்பிற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் அணிக்காக போட்டிகளில் வெற்றி பெற விரும்பினேன். அந்த விஷயம் நீங்கள் என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கிறீர்கள் என்பதனை பொறுத்தது.
Off the mark in #TATAIPL 2023 ✅@DelhiCapitals with a much-needed victory as they complete a 4-wicket win over #KKR at home 👏👏
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
Scorecard ▶️ https://t.co/CYENNIiaQp #TATAIPL | #DCvKKR pic.twitter.com/Ol7Mu3s9IT
இந்நிலையில் பேட்டி எடுப்பவர் “ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்காக ஒரு குறிப்பிட்ட திட்டங்களை வைத்திருந்தாரா” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த இஷான் சர்மா பேசுகையில் “உங்கள் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டிய நேரம் இது. எங்களுடைய அணியில் அதிர்ஷ்டம் இல்லை. நாங்கள் இங்கிருந்து ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம், தகுதி பெற விரும்புகிறோம், மேலும் போட்டியை வெல்வோம் என நம்புகிறோம் என் உருக்கமாக பேசினார் இஷாந்த் ஷர்மா.





