LSG கேப்டன் கேஎல்.ராகுலை விமர்சித்து கெவின் பீட்டர்சன் பேசியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 26வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் ஸ்டேடியத்தில் புள்ளிகள் பட்டியலில் சிறந்து விளங்கும் இரண்டு அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கான போட்டியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னிலை இருக்கிறது. மறுபுறம், காயங்களால் சிரமப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி போட்டியில் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அது சரியான முடிவு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிரூபித்தது. முதல் பாதியில் விக்கெட்டுகளை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பெரிய ஸ்கோரை கொடுக்க விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு லக்னோ அணியால் முதல் இன்னிங்சில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் போது லக்னோ அணி சார்பாக மியர்ஸ் 51 ரன்களும். கேப்டன் கே.எல்.ராகுல் 39 ரன்களையும் எடுத்தனர். இரண்டு பேட்ஸ்மேன்களுக்கிடையில் 82 ரன்களின் தொடக்க பார்ட்னர்ஷிப்பும் இருந்தது, ஆனால் அதன் பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இதன் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் கே.எல்.ராகுல் ஆடிக்கொண்டிருக்கும் போது ஐபிஎல் வர்ணனை செய்து கொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் மூத்த பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் “பவர்பிளேயில் கே.எல்.ராகுலின் பேட்டிங்கைப் பார்ப்பது மிகவும் சலிப்பான விஷயம்’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.
Oh man.. Kevin Pietersen said this in live commentary "Watching KL Rahul bat in the powerplay is the most boring thing I've ever done." pic.twitter.com/y8m4g2ZNT4
— Vishal. (@SPORTYVISHAL) April 19, 2023
இந்நிலையில் எளிதான இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததற்கு பிறகு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஆடவில்லை. எனவே ராஜஸ்தான் அணி இறுதியில் 144 ரன்களை மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது.





