குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது ஐபிஎல் 2023 தொடரின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் காமத்தை பலத்த காயம் அடைந்தார்.
— Ninja (@IPLcskMSD) May 16, 2023
இந்த சம்பவம் நேற்று சன் ரைசர்ஸ் விளையாடும் போது 16வது ஓவரை வீச வந்தார் நூர் அஹமத். அப்போது பந்தை எதிகொண்ட ஹென்ரிச் கிளாசென் ஸ்ட்ரெய்ட் டிரைவ் அடிக்க முயற்சி செய்தார் ஆனால் பந்தின் லைனில் இருந்து வெளியேறத் சென்றதால் அது நேரடியாக அஹமத் வலது கணுக்காலில் பட்டது. அடி அட்டதுமே அஹமத் வலியால் மைதானத்தில் விழுந்தார்.
பின்னர் மருத்துவர்கள் உதவியோடு 18 வயதாகும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் நூர் அஹமத் சக வீரர்களின் உதவியுடன் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அஹ்மத் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ராகுல் தெவாடியா கடைசி பந்தில் 16வது ஓவரில் வீசினார். அந்த போட்டியில் 2.5 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதே போல இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை.
Noor Ahmad hurt badly. Hope not serious. GT need him in the playoffs#GTvsSRH #IPL2023 pic.twitter.com/837i7WylUU
— चिरकुट ज़िंदगी (@chill_babu) May 15, 2023
இதற்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக பந்துவீசிய போது அவர் நான்கு ஓவர் ஸ்பெல்லில் 38 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமாக பந்துவீசினார். இதுவரை அஹமத் ஒன்பது போட்டிகளில் விளையாட 22.63 சராசரியுடன் 7.11 எக்கனாமிக் மதிப்புடன் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியை பற்றிப்பேசுகையில் இந்த போட்டியில் கேப்டன் முதலில் டாஸ் வென்ற எய்டன் மார்க்ரம் பந்துவீச முடிவு செய்தார். அதன் படி காளமிறங்கிய சப்மன் கில், சாய் சுதர்சனுடன் இணைந்து இன்னிங்ஸைக் கையாண்டு 101 ரன்கள் எடுத்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கமே சரியில்லாமல் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகளை போல வில தொடங்கியது. தனி ஆளாக விளையாடிய கிளாசன் அரை சதம் அடித்த நிலையிலும் வெற்றியடைய முடியவில்லை. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.





