ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இருவருக்குமே முக்கியமான பொடியாக இருந்ததினால் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற RCB முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

எப்போதும் போல தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் இன்னிங்ஸை தொடங்கினர். இரு வீரர்களும் ஜாக்கிரதையாக ரன்களை குவிக்க தொடங்கினர். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் போட்டியின் 2வது ஓவரில் வரின் போது மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீசினார். இந்நிலையில் ஃபாஃப் டு பிளெசிஸிடம் பந்தை வேகமாக கவர் டிரைவ் அடிக்க அது பவுண்டரியை நோக்கி விரைந்தது. அப்படி ஓடும் பொது அடிபட்டு நடக்கமுடியாமல் பெலிவியன் சென்றார்.
இந்நிலையில் தொடக்கம் முதல் ஆர்சிபி வலுவாக இருந்தபோது, இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலியை ஸ்டம்பிங் அவுட் செய்தார் ரவி பிஷ்னோய். விராட் கோலியின் விக்கெட்டிற்கு பிறகு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுக தொடங்கின. எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடாத நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே பெரிய அடி வாங்கியது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் மேயர் ஆட்டமிழக்க அதற்கு ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது லக்னோ. பின்னர் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு ஓவரும் ஒருவராக ஆட்டமிழக்க பரிதாப நிலைக்கு சென்றது லக்னோ அணி 8வது விக்கெட்டையும் இழந்தது லக்னோ.

அதற்கு பிறகு ரன்கள் எதுவும் செல்லாத நிலையில் 19வது ஓவரில் நவீன் விக்கெட் விழுக அடிபட்ட காயத்துடன் மைதானத்தில் இறங்கி விளையாடினார் லக்னோ கேட்டான் கேஎல் ராகுல். இருந்த போதிலும் அவருக்கு காலில் அடிபட்டதினால் சரியாக ஆடமுடியவில்லை. எனவே லக்னோ அணி 19.5 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இருந்த போதிலும் கேஎல் ராகுல் அடிபட்டாலும் அணிக்காக விளையாட வந்தது அனைவரது மனதையும் கவர்ந்தது.





