ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை அடித்து இருந்தனர். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்கள். 36 பந்துகளில் பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ருதுராஜ்.
இந்நிலையில் இந்த அரை சதத்திற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது இளம் பந்துவீச்சாளர் நல்கண்டே வீசிய அந்த நோ பால் தான். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே எதிர்த்து முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் இருவரும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
No ball out pic.twitter.com/h4MO4VY5NA
— Cricket (@Crictadium) May 23, 2023
அப்படியொரு நிலையில் தான் இரண்டாவது ஓவரில் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் தர்ஷன் நல்கண்டே தர்ஷன் தனது முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் மூன்றாவது பந்தை தர்ஷன் வீச, ரிதுராஜ் கெய்க்வாட் ஸ்டிரைக்கில் இருந்தார். நல்கண்டே ஒரு குட் லெங்த் பந்து வீச, கெய்க்வாட் அதனை புரிந்து கொள்ளாமல். பந்தை அடிக்க அது நேராக ஷுப்மன் கில் கைக்கு சென்றது.
ஆனால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை குஜராத் கொண்டாடும் முன்பே நடுவர் அதை நோ பால் என்று கூற குஜராத்தின் மகிழ்ச்சியெல்லாம் பொடி பொடியாக மாறியது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் இளம் பந்து வீச்சாளர் மீது கொஞ்சம் கோபப்பட்டது போல தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு சதம் அடித்த நிலையில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார் ருதுராஜ்.





