இந்தியன் பிரீமியர் லீக் தற்போது இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் முடிந்த உடனேயே இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படும். அங்கு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஸ் அணியில் இந்தியா விளையாடுவதற்காக இன்று ஏப்ரல் 25ஆம்

தேதி செவ்வாய்க்கிழமை வீரர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
அதில் ரஹானேவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து திடவீரென அதிரடியாக நீக்கப்பட்ட ரஹானே தன்னுடைய விடா முயற்சியால் மீண்டும் டெட்ஸ்ட் அணியில் இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ரஹானே இதுவரையில் 7 போட்டிகள் விளையாடு 224 ரன்களை எடுத்து 44 ரன்கள் சராசரியிலும் அற்புதமான ஸ்ட்ரைக் ரோட்டிலும் இருக்கிறார்.
ஸ்ரீசாந்த கூறியது :
இந்நிலையில் சமீபத்தில் பேசி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீ சாந்த் கூறுகையில் “நான் ரஹானேவை இந்திய அணியில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் நேரத்தில் அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது ஒரு வேலை அவரை இந்திய அணியில் சேர்த்தால் அது தேர்வு குழு செய்யுமாம் தைரியமான முடிவாக இருக்கும் என்று கூறினார்.

அடித்து நடக்கும் உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். அவருடைய விளையாட்டை வைத்து முடிவு செய்ய கூடாது. அவருக்கு தேவையான ஆதரவை வழங்கினால் கண்டிப்பாக அவர் வெற்றியடைவார் என்று நம்புகிறேன். அவர் நான்காவது இடத்தில இறங்கி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்று கூறினார் ஸ்ரீசாந்த்.

ஐபிஎல்லில் ரஹானே :
ரஹானே 2007-ம் ஆண்டு ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின் 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு 15 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரஹானே 08 போட்டிகளில் மட்டும் வெற்றியை பதிவு செய்தார். அதன் பிறகு 2019-ம் ஆண்டு 09 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்த ரஹானே அந்த சீசனில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றியை ராஜஸ்தான் அணிக்கு தேடித்தந்தார். 2023 க்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரஹானேவை 50 லட்சதிற்கு ஏலத்தில் எடுத்தது.





