இந்திய கிரிக்கெட் உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கருதப்படுபவர் விராட் கோலி. இவர்உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஏனென்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அற்புதமான சாதனைகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது அற்புதமான பேட்டிங் திறன், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது, பல நுட்பமான ஷாட்டுகளை அடிப்பது, ஆக்ரோஷமாக விளையாடி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.

மேலும் உலக கிரிக்கெட் மட்டுமின்று ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தையும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இப்படி பல சிறப்புகளை கொண்ட விராட் கோலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது ஜெர்சி எண் 18 க்குப் பின்னால் உள்ள முக்கியத்துவத்தை பற்றி பேசியிருந்தார்.
விராட் கோலி கூறியது :
இந்த நம்பருக்கு எனக்கு எதோ ஒரு பெரிய தொடர்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்னுடைய சிறய வயதில் என்னுடைய ஹீரோவின் ஜெர்சியை அணிய விரும்பும் குழந்தையாக இருந்தேன். ஆனால் தற்போது எனது ஜெர்சி எண்ணையும் பெயரையும் பலர் அணிந்திருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் ஒரு நாள் இந்த நிலையில் இருப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார் விராட்.
Today’s date 🤝 VK’s jersey no.@ImVkohli explains the importance of 1️⃣8️⃣ in his life’s events! Will today’s match in the #RaceToPlayOffs add to the list?
— Star Sports (@StarSportsIndia) May 18, 2023
Tune-in to #SRHvRCB at #IPLonStar
Today | Pre-show at 6:30 PM & LIVE action at 7:30 PM| Star Sports Network #BetterTogether pic.twitter.com/SWlA8gT3d0
மேலும் பேசி அவர் கூறுகையில் “என்னுடைய இந்த 18 நம்பர் என்பது இந்தியாவின் முதல் U19 போட்டியில் விளையாடும் போது எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணாகத் தொடங்கியது. நான் அந்த நம்பர் தான் வேண்டும் என்று கேட்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த என் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான எண்ணாக மாறியது.

நான் இந்திய அணிக்காக அறிமுகமானது ஆகஸ்ட் 18, 2008 அன்று. எனது தந்தை காலமானது டிசம்பர் 18, 2006 அன்று. எனது வாழ்க்கையில் இரண்டு முக்கியமான தேதிகள் 18 ஆகும் என்று மேலும் கூறினார் விராட் கோலி.
RCB vs SRH :
இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தான் இன்று நடந்துவரும் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி தற்போது முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி சுமாரான தொடக்கத்தை கொடுத்த நிலையில் இந்த செய்தியும் எழுதும் வரையில் விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.





