நேற்று முன்தினம் ஐபிஎல் 2023ன் 9வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் கொல்காத்தாவிற்கு எதிரான ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 205ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு பிறகு களமிறங்கிய ஆர்சிபி அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பத்ற்ட்டத்தால் 17.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் கொல்கத்தாவின் இந்த அருமையான வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் 19 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா. இவர் வெங்கடேஷ் இயருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினார். மேலும் ஆச்சிரியமூட்டும் வகையில் தினேஷ் காத்திக், கரண் சர்மா, அனுஜ் ராவத் உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் முஷ்டாக் அலி அல்லது விஜய் ஹசாரே போன்ற போட்டிகளை விளையாடியது கிடையாது.
இருந்த போதிலும் எந்த அனுபவனும் இல்லாமல் தன்னுடைய அணியின் சொந்த மைதானத்தில் அப்படியொரு அருமையான பந்துகளை வீசி கொல்கத்தா அணியன் வெற்றிக்கு காரணமாக இருந்தார் சுயாஷ் சர்மா. இருந்த போதிலும் இவரை கொல்கத்தா அணி 20 லட்சம் என்ற அடிப்படை மதிப்பில் தான் விலைக்கு வாங்கியது. ஆனால் அவரது லெக் பிரேக் மற்றும் கூக்ளி தனித்தன்மையாக இருப்பதினால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியுள்ளது.

யார் இந்த சுயாஷ் சர்மா :
சுயாஷ் சர்மாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவரது கிரிக்கெட் பயணம் அவ்வளவு எளிதானது கிடையாது. சென்னை, கொல்கத்தா, மும்பை போன்று டெல்லி கிரிக்கெட் கிளப் வீரர்களுக்கு லாபகரமாக இருக்காது. சொல்லப்போனால் திறமை இருந்தாலும் கூட சிலரின் ஆதரவு இல்லாமல் பெரிய அணிகளில், மாநில அணிகளில் பங்குபெறுவது என்பது நடக்காத ஒரு காரியம். ஆனால் சுயாஷ் சர்மா தன்னுடைய திறமையினால் இந்த வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
Anuj Rawat ☑️
— IndianPremierLeague (@IPL) April 6, 2023
Dinesh Karthik ☑️
Watch Suyash Sharma pick two quick wickets in his debut game.
Live – https://t.co/V0OS7tFZTB #TATAIPL #KKRvRCB #IPL2023 pic.twitter.com/3igG1jDWb4
சுரேஷ் பத்ராவின் மாணவர் :
பொருளாதார ரீதியிலான நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர். அதே போல டெல்லி சூழல் பந்து வீச்சாளர் சுரேஷ் பத்ராவின் மாணவர் ஆவர். ஆனால் சுரேஷ் பத்ரா கொரோன காரணமாக உயிரிழந்து விட்டார். டெல்லி பயிற்சியாளர் ரந்தீர் சிங் உதவியால் சில லீக் ஆட்டங்களில் விளையாடி வந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி கிரிக்கெட் சங்க லீக்கில் வேகமான கூக்ளிகளை போட்டு பிரபலமானார். அதன் காரணமாக 25 வயதிற்கு உள்ப்பட்டோர் வெள்ளை பந்து ஆட்டத்தில் இடம் பெற்று தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்.
Suyash Sharma cut the cake & celebrating with the KKR's team for brilliant performance on his debut match. pic.twitter.com/cykFNwhtez
— CricketMAN2 (@ImTanujSingh) April 7, 2023
70 ஆயிரம் பேர் முன்னால் :
ஆனால் துரதிஷ்ட வசமாக சிக்கி நாயுடு டிராபி உள்ளிட்ட பல தொடர்களில் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அப்படி எந்த பெரிய லீக் ஆட்டத்திலும் மூலம் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று திறமையின் 70 ஆயிரம் பேருக்கு மேலே இருக்கும் ஒரு இடத்தில் எந்த அச்சமும் இல்லாமல் தன்னுடைய திறமைமை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினம். ஆனால் அதனை சுயாஷ் சர்மா செய்தும் காட்டியுள்ளார்.





