வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவிய நிலையில் மூன்றாவது போட்டியில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து. சொல்லப் போனால் இது ஒரு டெஸ்ட் தொடர் போன்றே செல்லவில்லை. இரண்டு அணிகளுமே மிகவும் கடுமையாக விளையாடுவதினால பல சர்ச்சைகளும் கிளப்பியது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி போர்ஸ்டோ ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சையாக மாறி இரண்டு நாட்டு செய்தி ஊடங்களுக்கு இடையே சில சர்ச்சையான விஷயங்கள் நடந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் மிகவும் கடமையாக போராடியது இங்கிலாந்து. அதற்கு பலனாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த வருட ஆஷஸ் தொடரில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தது.
இதனிடையே இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீப காலமாக ஆஷஸ் தொடரில் கொஞ்சம் சுமாராக பந்துவீசி வருகிறார். இந்நிலையில் இதற்கு இங்கிலாந்து மைத்தனத்தின் பிளாட் பிட்சுகளே காரணமாக இருக்க கூடும் என்று செய்திகள் பரவின. அத்திமட்டுமல்லாமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது 40 வயதை எட்டியுள்ளதன் காரணமாக வேகத்தை விடமும் அவருடைய பந்துவீச்சில் ஸ்விங்கை மட்டுமே நம்பி பந்துவீச வேண்டிய நிலை உள்ளது.

இங்கிலாந்து அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் 140 கிலோ மீட்டருக்கு மேலே பந்துவீசும் போது இவருக்கு அதனை செய்ய கொஞ்சம் கடினமாக இருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. இதனால் இந்த ஆஷஸ் தொடரே இவருக்கு கடிசியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரையில் 181 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 688 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எந்த வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தான் இன்னமும் இவற்றினால் 12 விக்கெட்டுகளை வாழ்த்த முடிந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைப்பார். ஆனாலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.

அப்படிப்பட்ட நிலையில் தான் ஆண்டர்சன் பெயர் வரும் நாலாவது ஆஷஸ் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியானது வரும் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் இந்த போட்டி நடக்கும் ஓல்டு ட்ரஃபோட் மைத்தனத்தில் இவருடைய பெயரில் ஒரு ஸ்டாண்ட் உள்ளது. இதனால் இந்த 4வது ஆஷஸ் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.




