கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது 32 வயதான கேனுக்கு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 13வது ஓவரின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை காப்பாற்ற முயற்சி செய்யும் போது வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் நடக்கக்கூட முடியாத நிலையில், மருத்துவர்களின் துண்டையுடன் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

அதற்கு பிறகு அந்த போட்டியில் வர விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் தான் குஜராத் அணி ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு ஐபிஎல் 16 சீசனில் இருந்து முழுவதுமான கேன் வில்லியம்சன் விலகுவதாக தெரிவித்தது. ஏனெற்றால் கிரிக்கெட் வீரருக்கு முழங்கால் காயம் என்பது மிகவும் ஆபத்தான ஓன்று இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் காயம் குறித்து கவலை கொண்டு அவரை உடனடியாக வீட்டிற்கு திரும்பிவர கட்டளையிட்டது.
இதனையடுத்து அந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட வில்லியம்சன் தற்போது குணமாகி வருகிறார் . இருந்த போதிலும் அவருடைய காயம் பற்றிய விஷயம் அதிகமாக பேசப்பட காரணம் 2015 மற்றும் 2019 அம ஆண்டுகளின் உலகக்கோப்பையில் போது நியூசிலாந்து அணிக்கு முக்கிய வீரராக இருந்தார் கேன் வில்லியம்சன். ஆனால் அவருக்கு காயம் ஏற்படுத்தினால் வரவிற்கும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வண்ணம் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் கேன் வில்லியம்சன்.

கேன் வில்லியம்சன் பேட்டி வீடியோ :
அவர் கூறுகையில் “ஒவ்வொரு வாரமும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன். இது போல எனக்கு காயம் ஏற்பட்டு இத்தனை நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது கிடையாது. என்னை போல காயம் அடைந்த பல வீரர்களுடன் நான் பேசினேன். அவர்களுடைய அனுபவத்தையும் பெற்றுகொண்டுளேன். பயணம் சற்று நீளமானது, எனவே அதனை வெகுதூரம் முன்னோக்கிப் பார்த்தால் அது கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.
"To have a focus and see some of those steps and tick some of those off keeps you quite motivated"
— BLACKCAPS (@BLACKCAPS) June 26, 2023
Hear from Kane Williamson about his rehabilitation progress since injuring his knee in March. pic.twitter.com/le1mjneu2h
காயம் ஏறப்பட்டவுடன் துவக்கத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் மெதுவாக குணமடைந்து வருகிறேன். இந்த அணுகுமுறையில் நான் வேகமாக்கவில்லை. பொறுமையாக முன்னேறி வருகிறேன். ஆனால் இந்த பயணம் ஒரே நேர்கோட்டில் செல்லுமா என்று தெரியவில்லை, சில தடங்கல்கள் வந்தாலும் அதனை ஏந்திக்கொண்டு முன்னேற வேண்டும். ஆனால் இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்றார் வில்லியம்சன்.
மேலும் வருகின்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 குறித்து பேசிய அவர் பேசுகையில் “உலககோப்பைக்கு போதுமான நாட்கள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எனவே விரைவில் குணமடைந்து என்னுடைய விளையாட்டை மீண்டும் கொண்டு வர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் அணிக்கு திரும்ப ஆவலாக இருக்கிறேன். அணியின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை, இருந்தாலும் என்னை தயார் படுத்திக்கொள்வதில் நான் எந்த குறையும் வைக்கவில்லை என்றார் கேன் வில்லியம்சன்.





