ஐபிஎல் 2023 தொடரானது தற்போது நிறைவடைந்த நிலையில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக வரும் 7முதல் 11ஆம் தேதி வரையில் நடக்கும் உலககோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.

அப்படிப்பட்ட நிலையில் தான் ஹர்திக் பாண்டியா குறித்து சமீபத்தில் கொல்கத்தா விளையாட்டு செய்தியாளரிடம் முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் “ஹர்திக் பாண்டியா ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவரால் போட்டிகளில் தொடர்ந்து 135 கிமீ வேகத்தில் பந்துவீச முடிந்தால் அவரால் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மாறி அணைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் சவாலாக இருப்பர் க்ளூஸனர் கூறினார்.
மேலும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டை விட்ட காரணம் தன்னுடைய மற்ற கிரிக்கெட் போட்டிங்களில் சரியாக செயல்படுவதற்காக இருக்கலாம். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் இருக்கும் இடத்தைச் சோதித்து, உங்களை நீங்களே சோதித்துக்கொள்வதில் டெஸ்ட் கிரிக்கெட் சோதனைகளின் உச்சம் என்றார். வரவிருக்கும் WTC இறுதிப் போட்டியில் எந்தவொரு சூழ்நிலைக்கும் தகுந்தவாறு இந்தியா நன்கு தயாராக இருப்பதாக க்ளூசெனர் எண்ணுகிறார்.

அதற்கான காரணம் சமீப காலத்தில் இந்திய சீமர்கள் முன்னேறிய விதம் தான் அந்த அணி உலகின் சிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றாக மாற்றியிருக்கிறது என்றார். இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெற அவருக்கு விருப்பம் என்று கேட்டபோது, அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களுக்கும் இந்தியாவின் பேட்டர்களுக்கும் இடையில் கண்டிப்பாக கடுமையான போட்டி இருக்கும். அந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றிபெறும் என்றார்.

கிரிக்கெட்டில் பாரம்பரியமான ஸ்பின்னர்கள் இந்தியாவில் இருந்து வருகின்றனர். எந்த மைத்தனத்திலும் எந்த வகையான விக்கெட்டிலும் விளையாடும் திறன் அவர்களிடம் உள்ளது. சமீப ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வளர்ந்த விதம் இந்த அணிய தொடர்ந்து WTC கிரிக்கெட்டிற்கு வர காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணிக்காக க்ரீன் விக்கெட்டை தயார் செய்வார்கள். அதனால் இந்திய அணியின் கொஞ்சம் திணறியது.
ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. இந்த அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்த சூழ்நிலையிலும், அவர்களால் போட்டியிடக்கூடிய அணியை மாறியுள்ளனர் என்றார் க்ளூசெனர்.





