இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான அற்புதமான ஆட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் அனல் பறக்கும் இன்னிங்ஸ் மற்றும் அற்புதமான சிக்ஸர்கள் ரசிகர்களுக்கு விருத்தளித்தது.
It's Diwali in Mohali, courtesy Kyle Mayers 🔥🎇🎆#IPLonJioCinema #TATAIPL #PBKSvLSG pic.twitter.com/1MLi05NlBj
— JioCinema (@JioCinema) April 28, 2023
முதலில் லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கே.எல். ராகுல் 12 ரன்களில் வெளியேறினார், இருப்பினும் மற்றொரு பக்கம் மேயர்ஸ் அதிரடி பாணியை விடாமல் விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்ய, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 9 வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 குவித்து இருந்தனர். பதோனி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற
பஞ்சாப் அணி பேட்டிங் :
அதன் பின் பூரான் தனது பங்கிற்கு பஞ்சாப் அணியை சிதறடித்தார். 15.5 ஓவர்களிலே 200 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை காட்டி வந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். பஞ்சாப் அணியின் பௌலர்கள் என்ன செய்யதென்று தெரியாமல் திணறி வந்தனர். ஸ்டானிஸ் 72 ரன்களை குவித்து வெளியேற, அதன் பின் பூரான் 45 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார், இறுதியில் 20 ஓவர்களில் 257 ரன்களை குவித்து வந்தது லக்னோ அணி.
தோல்வி :

258 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைய ஒரு புறம் நிதானமாக விளையாடிய அதர்வா 66 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்த வெளியேற பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி நகர்ந்து சென்றது.அதன் பின் வந்த லிவிங்க்ஸ்டனும் ஜொலிக்க முடியாமல் வெளியேறினார் இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 201 ரன்களை மட்டுமே அடித்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் ப்ரார் பந்துவீச்சில் லக்னோ அணியின் பேட்ஸ்மேன் மேயர்ஸ் மிட்-விக்கெட் மீது ஒரு பிரமாண்ட சிக்ஸரை அடித்தார். இதன் போது டக் அவுட்டில் அமர்ந்திருந்த வீரர்கள் ரவி பிஷ்னோய், டி காக் ஆகியோர் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் அணைத்து வீரர்களும் இந்த சக்ஸரினால் வாயடைத்து போனார்கள். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





