ஐபிஎல் 2023 தொடரில் இதுவரையில் ஆடிய போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் மும்பையின் எஞ்சிய 4 போட்டிகள் மிக முக்கியமானவை. இவை தான் பிளே ஆஃப் செல்வார்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கும். இந்த நிலையில் தான் மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2023தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ஐபிஎல்லின் மினி ஏலத்தில் ரூ.8 கோடிக்கு அணியில் சேர்ந்தார். ஆனால் இந்த சீசனில் அவருடைய பந்துவீச்சு அவ்வளவு திருப்தி கரமாக இல்லை என்று தான் கூறவேண்டும். மேலும் காயம் காரணமாக ஜோப்ரா ஆர்சர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் அவற்றில் அதிக ரன்களை விட்டு கொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த சீசனில் இருந்து வெளியேறி இங்கிலாந்திற்கு செல்ல இருப்பதாகவும் தற்போது செய்திகள் வந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்ச்சருக்குப் பதிலாக அவரது அணியின் வீரர் அதாவது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் ஆர்ச்சருக்குப் பதிலாக மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 5 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க முடிந்தது. அதேசமயம் 9.50 என்ற எக்கனாமிக் ரன்களை கொடுத்துள்ளார். அதனால் சில போட்டிகளால் தோல்வியும் ஏற்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் தான் அவருக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டான் அணியில் இணைந்துளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் ஜோர்டான் இதுவரையில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜோர்டான் 9.32 எக்கனாமிக் ரன்களை கொடுத்துள்ளதுளார். இருந்த போதிலும் இந்த சீசனில் ஜோர்டானுக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





