உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிரிகள் போட்டிகள் என்றால் அதற்கு இந்தியா vs பாகிஸ்தான் என்று பலரும் கூறுவார்கள். கிட்டத்தட்ட பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போட்டியானது நடைபெற்று ஒரு வருடம் ஆகும் அந்நிலையில் இந்தியா வரும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது அதிக ரசிகர்கள் அமரும் படியாக மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியானது எந்த சந்தேகமும் இன்று மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக இருக்கும். ஏனென்றால் இரண்டு அணிகளின் நடுங்களுமே அரசியல் ரீதியாக சில பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறது. இதனிடையே இந்திய அணியை பாகிஸ்தான் உழைக்க கோப்பையில் வெல்ல வில்லை. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 போட்டியில் இந்தியாவை பாபர் அசாம் தலைமையிலான பாஸ்கிதான் வீழ்த்தியது. ஆனாலும் 50 ஓவர் உலக கோப்பையில் இன்னமும் வெற்றியை எட்டவில்லை.
இதனால் தான் வரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் ஒருநாள் போட்டியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தான் முன்னாள் பாஸ்கிதான் அணியின் வீரரான அப்துல் ரசாக் கடந்த 1997 லில் இருந்து 1998 வரையில் இந்தியா அணி தங்களுடைய அதிகமாக விளையாடாதது குறித்து பேசியுள்ளார்.

அப்துல் ரசாக் கூறியது :
அவர் கூறுகையில் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பரஸ்பர மரியாதை மற்றும் நட்பைப் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாத ஒரே ஒரு இந்திய அணி மட்டுமே உள்ளது. 1997 முதல் 1998 வரை, நாங்கள் மிகவும் நன்றாக இருந்ததால் அவர்கள் எஎங்களுடன் அதிகம் விளையாடவில்லை. ஏனென்றால் இந்தியா எப்போதும் தோற்றது. இப்போது, நிலைமை மாறிவிட்டது. நாம் இப்போது 2023ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஆனால் நாம் சிந்தனை செய்யும் முறையை மாற்ற வேண்டும்.

எந்த அணியும் பெரியவை அல்லது சிறியவை என்று கிடையாது. செயல்திறன் தான் இங்கு பேசும். இரண்டு அணிகளும் சிறந்த அணிகள் தான். பாகிஸ்தான் அணி பலவீனமாக உள்ளது என்று சொல்ல முடியாது. ஆஷஸ் தொடரைப் பார்க்கிறீர்கள், எந்த அணி சிறந்தது என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா? சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறுகிறது. நாம் இந்த விஷயத்தில் இருந்து வெளியேறி இந்தியா vs பாகிஸ்தான் தொடர்களை நடத்த வேண்டும் என்றார் அப்துல் ரசாக்.
கனடாவில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்புத் தொடருக்குப் பிறகு, அரசியல் பக்கங்களில் அதிகரித்த பதட்டங்கள் காரணமாக 2004 வரை இரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு ஆட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தது, டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டிகளில் 3-2 வெற்றியைப் பதிவு செய்தது




