கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் முதல் போட்டியானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது 14 ஆம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியானது தற்போது உள்நாட்டில் ஆஃப்கானிஸ்தான் அணியடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும் அதிலிருக்கும் வீரர்கள் பெரும்பாலும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளவுவதற்கான பத்திரிக்கையாளர் ஓருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இளம் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபியுக்.

அவர் கூறுகையில் ” நாங்கள் வலைப்பயிற்சி செய்யும் போது நங்கள் ஹாரிஸ், நசீம், ஷாஹீன் ஆகியோ எதிர்கொண்டு போட்டிகளுக்கு தயாராகி வருகிறோம். அப்போது எதிரணி பந்துவீச்சாளர்களை வீழ்த்துவது உங்களுக்கு எளிதாக இருக்கிறதா? குறிப்பாக நீங்கள் இந்தியாவைப் பற்றி பேசினால்.. ஜஸ்பிரித் பும்ராவும் ஆசிய கோப்பைக்கு திரும்ப வருவது போல் தெரிகிறது” என்று ஷபீக்கிடம் ஒரு நிருபர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “எங்கள் பந்துவீச்சு தாக்குதல் மிகவும் நன்றாக உள்ளது, உண்மையில், உலகின் சிறந்த பந்துவீச்சு. வலைகளில் அவர்களை ஷாஹீன், ஹரிஸ், நசீம் போன்றோரை எதிர்கொள்கிறோம்… அவர்களின் சவாலான பந்துகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். அது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது மற்றும் போட்டிகளுக்கு சிறப்பாக தயாராகவும் உதவுகிறது.
நாங்கள் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடினால், எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று பதிலளித்தார். இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆசிய கோப்பையில் மோதுகின்றன. இதற்கிடையில், இரு அணிகளும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன என்பது குறிபிடதக்கது.




