உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலககோப்பை போட்டியாகும்

இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து கொண்டு இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தாலும் இடையே மழை காரணமாக கொஞ்சம் போட்டி நிறுத்தப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு போட்டி தொடங்கிய நிலையில் இந்திய அணிக்கு உடனடியாக சில விக்கெட்டுகள் விழுக கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி காரணமாக இந்திய 48 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்டும் விராட் கோலி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்கம் முதலே மாஸ் காட்டும் அவர் இந்த தொடரில் ஒரு சதம் உள்பட 4 அரை சதங்களை எடுத்துள்ளார் மேலும் 5 போட்டிகளால் விளையாடியுள்ள அவர் 354 ரன்களை விளாசி முதன்மை இடத்தில் தற்போது உள்ளார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் சதம் அடிக்கும் நேரத்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் மற்றும் அவர் இன்று விளையாடிய விளையாட்டு ஏன் சிறந்தவர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது பற்றி சொல்லும். மேலும் அவர் அழுத்தத்தின் கீழ் ஒரு நல்ல நாக் என்று நான் நினைத்தேன், அவர் 100 ரன்களை எடுக்கவில்லை என்றாலும், அவர் தனது அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றார்.

நாங்கள் வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்வோம். நாங்கள் குத்துக்களை வீசிக் கொண்டே இருப்போம், வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்போம், தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம், இன்றிரவு எங்கள் பந்துவீச்சு குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் முயற்சிகளில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆஸியை எதிற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார் டேரில் மிட்செல்



