இந்தியாவின் வரும் அக்டோபர் மாதம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை போட்டியானது நடக்க இருக்கிறது. அதே சமயம் இதற்கு முன்னதான இந்தியா பல போட்டிகளில் விளையாட இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியானது தற்போது அயலர்ந்து தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியிலும், அதனை தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெற இருக்கிறது.

இத்னால் உலக கோப்பையில் பங்குபெரும் சில வீரர்களுக்கு ஓய்வு இந்த தொடர்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு எதிர்கால இந்திய அணியின் தூண்களாக வர தயார் படுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி இந்திய அணியை வழிநடித்தும் வாய்ப்பை பெற்றிருப்பவர் தான் ருதுராஜ் கெய்க்குவாட். ருதுராஜ் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பாக் விளையாடினார். இருந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை.
ஆனால் அயலர்ந்திற்கு எதிரான போட்டியில் துணை கேப்டனாகவும் ஆசிய போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் ருதுராஜ் பொறுப்பேற்றுள்ளார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக வரவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் ருதுராஜ் கெய்க்குவாட் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் தேர்வாளரான கிரண் மோர்

ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்து கொண்டிருக்கிறேன். கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே சிறந்த வீரர்கள். ருதுராஜ் சரியாக செயல்பட்டால் அவரால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும். அவருடைய அடிப்படைகள் மிகவும் சரியானவை. அவர் இந்தியாவின் எதிர்கால கேப்டனாகவும் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவருக்கு ஒரு சிறந்த குணம் உள்ளது.

மேலும் அவர் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் விளையாடுகிறார். எனவே அவர் அணியைக் கையாள்வது மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வது பற்றிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு தரமான வீரர், அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதற்காக நான் காத்திருக்கிறேன். யஷஸ்வி டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்தார், பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 ஐ தொடரிலும் அரைசதம் அடித்தார்.

எனவே அவருக்கு விஷயங்கள் எளிதானது அல்ல, ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியடைவார் என்று பல கிரிக்கெட் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அப்படி அவர் தோல்வியடைந்தால் அவரது இடத்திற்கு வந்து விடுவார்கள். இந்த நேரத்தில்தான் ருதுராஜ் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த அழுத்தத்தை உங்களால் ரன்களை எடுக்க முடியுமா? தனது திறமையை நம்பி பெரிய ஸ்கோர் அடிக்க முயற்சிக்க வேண்டிய கட்டம் இது என்றார் கிரண் மோர்.



