உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023காண உலகக் கோப்பை ஆனது தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 25வது போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அவர்களுக்கு இந்த வருட உலக கோப்பையானது சரியாக வரவில்லை.

கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகின்றது. கடந்த போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியிடம் மாபெரும் தோல்வியை அடைந்தது.இலங்கை அணியை கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆனால் அவர்களுக்கு துல்லியையும் கை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் முதலில் பவுலிங் செய்ததால் இந்த முறை முதலில் பேட்டி தேர்வு செய்தது. ஆனால் அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும் பேர்ஸ்டோ 30 ரன்கள் மலான் 28 ரன்களை அடித்தனர்.

157 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணையின் தொடக்க ஆட்டக்கார குசல் நான்கு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தார். ஆனால் மற்றொரு முனையில் நின்று விளையாடிக் கொண்டிருந்த நிசங்கா ரன்களும் மற்றும் சதீரா ரன்களும் அடித்து சிறப்பாக விளையாடு இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு தேடித் தந்தனர். இதனால் நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து தற்போது அரையிறுதிக்கு வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது.

இந்நிலையில் இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு பேசிய இலங்கை வீரர் தீக்ஷனா பேசுகையில் “இங்கிலாந்து எங்கள் அணியை குறைத்து மதிப்பிட்டதாக நான் நினைக்கிறேன் ஏனென்றால் நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தோம், நாங்கள் நெதர்லாந்திற்கு எதிராக மட்டுமே வென்றோம். அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் எங்கள் பலத்தை நாங்கள் ஆதரித்ததால் முடிவு எங்கள் வழியில் சென்றது, நாங்கள் ஒரு எளிய திட்டத்துடன் சென்றோம், அதனால்தான் நாங்கள் இன்று ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் தீக்ஷனா கூறினார்




