இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்கு கேப்டனாக மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக ரோஹித் சர்மா ஓய்வு பெற போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருடம் நடக்கும் உலக கோப்பை போட்டியிலும் ரோஹித் இருப்பாரா என்பது சந்தேகம் என்பதினால் இது பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் தான் இந்த வதந்திகளுக்கு முடிவு காட்டியுள்ளார் ரோஹித் சர்மா. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் :நான் உண்மையில் ஓய்வு பற்றி யோசிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்று தெரியாது. இந்த நேரத்தில் நான் இன்னும் நன்றாக விளையாடி வருகிறேன். அதனால் இன்னும் சில வருடங்கள் அப்படியே விளையாட்டில் தொடரப் போகிறேன். நான் உண்மையில் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன்.வரும் 2025 ஆண்டில் WTC இறுதிப் போட்டி உள்ளது. இந்தியா அந்த போட்டியில் வெல்லும் என்று நம்புகிறேன்.
மேலும் கடந்த உலக கோப்பையில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி பின்னர் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இது நாட்டு மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய அணி தங்களுடைய நாட்டிலேயே உலக கோப்பை இறுதி போட்டியை விளையாடி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் :50 ஓவர் உலகக் கோப்பை தான் எனக்கு உண்மையான உலகக் கோப்பை. நாங்கள் அந்த உலகக் கோப்பையைப் பார்த்து வளர்ந்தவர்கள். மிக முக்கியமாக இது இந்தியாவில் எங்கள் வீட்டுக் கூட்டத்தின் முன்னிலையில் நடந்தது. இறுதி வரை நாங்கள் நன்றாக விளையாடினோம். நாங்கள் அரையிறுதியில் வென்றபோது. கோப்பையை வெல்ல நாம் ஒரு படி தூரத்தில் இருக்கிறோம் என்று நினைத்தேன். நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம்.
உலகக் கோப்பையையில் எங்களை தோற்கடிக்கக்கூடிய ஒரு விஷயம் என்ன?. எனக்கு ஒரு விஷயம் கூட என் நினைவுக்கு வரவில்லை. எல்லாவற்றையும் சரியாக செய்தோம். எங்களுடைய அணி சிறப்பான கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று நினைத்தேன். மேலும் அணிக்குள் இந்த முறை கோப்பையை வெல்லுவோம் என்று நம்பிக்கை இருந்தது.
நாம் அனைவருக்கும் ஒரு மோசமான நாள் இருக்கும். அந்த மோசமான நாள் அன்று தான் என்று நான் நினைக்கிறேன். அந்த இறுதிப் போட்டியில் நாங்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம் என்று நினைக்க வேண்டாம் சில விஷயங்கள் நம் வழியில் செல்லவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா எங்களை விட சற்று சிறப்பாக விளையாடினார்கள் என்றார் ரோஹித் சர்மா.




