மும்பை vs சென்னை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார். அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல் ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற.

சொல்லப்போனால் சென்னை அணியின் பந்துவீசிச் கடந்த 2 போட்டிகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. மும்பை பேட்ஸ்மேன்களும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்தும் ரன்களை குவிக்க முடியவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது இந்நிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
மும்பை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது 6 ஓவர்களுக்கு பிறகு பந்து திரும்ப ஆரம்பித்ததுதான். இதனால் சென்னை அணிக்கு மும்பையை வீழ்த்த சுலபமாக இருந்தது. அதிலும் சென்னை அணியில் சூழல் பந்து வீச்சாளர்கள் தான் அதிகமாக விக்கெட்டுகளை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அந்த வகையில் நேற்று நடந்த போட்டியில் ஜடேஜா சூப்பரான ஒரு கேட்சை பிடித்தார். அது சென்னை அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருந்தது
Team work at its best 🙌🏻
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
Dwaine Pretorius and Ruturaj Gaikwad combine to dismiss Tristan Stubbs 👌🏻👌🏻
WATCH 🔽 #TATAIPL | #MIvCSK pic.twitter.com/Jz3aqLK8yn
இந்நிலையில் ஜடேஜாவின் கேட்ச்க்கு பிறகு மீண்டும் ஒரு அற்புதமான காட்சி நடந்தது. அதாவது சென்னையின் 16 வது ஓவரை சிசந்த மகலா வீச வந்தார். ஆனால் மும்பை அணியின் பேட்ஸ்மேன் ஸ்டப்ஸ் சிசந்த மகலா வீசிய அந்த பந்தை சிக்ஸர் அடிக்க முயர்ச்சி செய்கையில் அது நேரடியாக நேராக இன்று கொண்டிருக்க பிரிட்டோரியஸை நோக்கி சென்றது. ஆனால் பந்து கொஞ்ச உயரமாக சென்றதால் சமநிலையை இழந்த பிரிட்டோரியஸ் பந்தை ஓடிவந்து கொண்டிருந்த ரிதுராஜை நோக்கி வீசினர்.

இறுதியில், ரிதுராஜ் அந்த கேட்சை காண கட்சிதமாக பிடிக்க, ஸ்டப்ஸ் பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று. அவர் 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த போட்டிகளை விட நேற்று நடந்த போட்டியில் இருந்து பேட்டிங், பேட்டிங், பந்துவீச்சு போன்றவற்றை பார்க்கும் போது சென்னை அணி கடுமையான பயிற்சிகளை செய்வது தெரிகிறது.




