ஐபிஎல் முடிந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களானது கோலகமலா இளையாடப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் MPL, KPL போன்று TNPl தொடரும் தமிழ் நாட்டில் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த TNPL தற்போது 7வது சீசனானது நடந்து வருகிறது. இந்த சீசனை பொறுத்தவரையில் 8 அணிகள் விளையாடுகின்றனர். கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று TNPL ன் 11வது போட்டியானது திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் சேபாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் ட்ரகன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸை வென்று பந்துவீச முடிவு செய்தது சேபாக் அணி. இந்நிலையில் திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் மற்றும் ஷிவம் சிங் முறையே 20 மற்றும் 21 ரன்களை எடுத்ததால், அந்த அணி ஆட்டத்தின் மோசமான தொடக்கத்தை பெற்றது. மேலும், அணியின் டாப்-ஆர்டர் ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர்.
பாபா இந்திரஜித், பூபதி குமார், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் முறையே ஒன்று, ஏழு மற்றும் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இருந்த போதிலும் பொறுமையாக ஆடிய ஆதித்ய கணேஷின் ஆட்டம்தான் டிராகன்ஸ் அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது கணேஷ் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மேலும் சரத் குமார் மற்றும் சுபோத் பதி ஆகியோரின் கேமியோக்களால் திண்டுக்கல் டிரான்ஸ் அணி 170 ரன்களை எட்டியது.
This might seem like an @ashwinravi99 appreciation account but can you blame us when he pulls this off?! #TNPLOnFanCode #TNPL pic.twitter.com/44YTtk4Uxt
— FanCode (@FanCode) June 21, 2023
இந்நிலையில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் அணியின் சிறப்பாக செயல்பட்ட நாராயண் ஜெகதீசன் மற்றும் பாபா அபராஜித் ஆகியோர் முறையே 37 மற்றும் 74 ரன்களை எடுத்தனர். இருப்பினும் சேபாக்கம் அணியின் மற்ற வீரர்கள் பிரகாசிக்க தவறியதால் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் வருண் சக்ரவர்த்தி டிராகன்ஸ் அணிக்காக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சேப்பாக்கம் ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவை பெவிலியனுக்கு அனுப்ப ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்த ஒரு அருமையான கேட்ச்தான் ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இது நடந்தது 14வது ஓவரின் இரண்டாவது பந்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை சஞ்சய் ஸ்லாக் செய்ய முயன்றபோது பந்து எட்ஜ் பட்டு மேலே சென்றது. இதன் போது பந்தை நோக்கி ஓடிய அஸ்வின் அருமையான டைவ் செய்து கேட்சை பத்திரமாக எடுத்தார்.
அவர் தொடக்கத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் பந்து வருவதை கணித்து அற்புதமாக பிடித்தார் அந்த சிறப்பான பீல்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




