இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதலே புதிய திறமை வாய்ந்த வீரர்கள் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனார். அதே போன்று கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக். இதுவரையில் 6 சீசன்கள் நடந்திருக்கிறது. தற்போது 7வது சீசன் கடந்த 12ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் TNPL 2023ல் 19வது ஆட்டத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக இருக்கவில்லை. ஏனென்றால் கோவை அணியின் தொடக்க வீரர்கள் சுஜய் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். அதோடு சாய் சுதர்சன் 28 பந்துகளில் 41 ரன்களையும் விளாசினார்.
மேலும் கடைசி நேரத்தில் அற்புதமாக விளையாடிய ராம் அரவிந்த் 22 பந்துக்களில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை விளாசியது. இதனையடுத்து விளையாடிய சேலம் அணிக்கு தொடக்கமே பேரிடியாக இருந்தது ஏனென்றால் தொடக்க வீரர் அமித் சத்விக் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேற, அடுத்தாக மோஹித் ஹரிஹரன் 7 ரன்களில் ஆட்டமிழக்க கவ்சிக் 4எ ரன்களில் ஆட்டமிழந்தார்.
"It was out, why was not it referred?" 😱
— FanCode (@FanCode) June 27, 2023
.
.#TNPLonFanCode pic.twitter.com/OnA20upedh
இதனையடித்து வந்த எந்த பேட்ஸ்மேன்களினாலும் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியாமல் ஆட்டமிழக்க சன்னி சந்து மட்டுமே 19 பந்துகளில் 29 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 18.6 ஓவர்களிலேயே மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். இதனால் கோவை அணி 79ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்கின் போது போட்டியையே மாற்றக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது.
வாய்ப்பில்லை ராஜா! Its kovai again!🥳#TNPL2023🏏#ssvlkk#vanakkamDaMapla#GethuKaatuvoma#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam💥#NammaOoruNammaGethu💪🏼 pic.twitter.com/JAH8nE7UaH
— TNPL (@TNPremierLeague) June 27, 2023
அதாவது முதல் இன்னிங்கில் லைக்கா கோவை கிங்ஸ் விளையாடி கொண்டிருக்க 3 வது ஓவரின் 3வது பந்தில் சுஜய் சிங் ரன் எடுக்க முயன்றார். அப்போது பந்தை வேகமாக கைப்பற்றிய பில்டர் ஸ்டாம்புகளை நோக்கி வீச, அது நேராக ஸ்டாம்புகளை சென்று தாக்கியது. இதன் போது சுஜய் கிரீஸுக்கு பக்கத்தில் நெருங்கிய போது பந்தை அவரை நோக்கி வந்ததால் அதனை தடுக்க கூடாது என்று எட்டி குதித்தார்.
ஆனால் அவர் அப்படி செய்யும் போது பந்து நேராக ஸ்டாம்புகளை தாக்கியது மேலும் அவர் கீரிலீஸிலும் காலை வைக்க வில்லை. இதனால் விதிமுறை படி இது அவுட். ஆனால் இதனை கவனிக்காத அவர்கள் DRS எடுக்கவில்லை. அப்படிப்பட்ட வர்ணனையாளர்கள் கூட இந்த விஷயத்தை சுட்டி காட்டினார்கள். ஒருவேளை இந்த விக்கெட்டை எடுத்திருந்தால் பந்துவீச்சாளர்கள் அழுத்தம் குறைந்திருக்கும், இரண்டாவது இன்னிங்கில் தேவைப்படும் ரன்களும் குறைந்திருக்கும்.




