ஐபிஎல் 2023 தொடரின் 35வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணி அபாரமாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் 5வது வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்ததே தோல்விக்கு கரணம் என்று கூறப்படுகிறது.

கோவப்பட்ட காரணம் :
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. இதன் போதுதான் குஜராத் இன்னிங்ஸின் 17வது ஓவரின் போது, அபினவ் மனோகர் அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மும்பை வேகப்பந்து வீச்சாளர் பந்துவீச பந்து ஷார்ட் தேர்ட் மேனை நோக்கி சென்றது. அங்கு மும்பை அணியில் அனுபவம் வாய்ந்த ஒருவரான பியூஷ் சாவ்லா பந்தை பிடிக்க முடியவில்லை.
ஆனால் பந்து அவரது கைகளில் சிக்காமல் பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. இதனால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் பியூஷ் சாவ்லா மீது கோவப்பட்டது கத்தினார். அந்த வ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரோஹித் ஷர்மா தனது சொந்த வீரர்களிடம் கோபப்பட்டபோது பல முறை களத்தில் காணப்பட்டுள்ளார்.
Poor misfield from #PiyushChawla leaves the captain #RohitSharma#RohitSharma𓃵 #MIvsGT #GTvMI @LensProtocol@phaverapp#LensProtocol #Phaver #SharetoEarn #Web3 pic.twitter.com/cD81Gcxg5c
— Junaid ahmed (@JuniConnects) April 25, 2023
மும்பை அணி பெரும் தோல்வியை சந்தித்த பிறகு மும்பை புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணி அபாரமாக பேட்டிங் செய்து மும்பை பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கியது. குஜராத் அணி சார்பாக ஷுப்மான் கில் பிரமாதமாக விளையாடி 56 ரங்களையும், டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 42 ரன்களையும் பெற்றனர்.

அதேசமயம் கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த ராகுல் தெவாடியா 5 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். 208 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணியில் இருந்து எந்த ஒரு பேட்ஸ்மேனும் ரன் குவிக்க முடியாமல் 152 ரன்கள் மட்டுமே எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.





