இந்தியாவில் தற்போது உலகிலேயே மிகப்பிரபலமான டி20 தொடரானது நடந்தது வருகிறது. உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் இங்கு வந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் உலக ரசிகர்கள் அனைவரின் கண்களும் ஐபிஎல் போட்டிகளின் மீது இருக்கையில் ஐபிஎல் தவிர்த்து ஒரு பெரிய சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அது சம்மந்தப்பட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளை நியூசிலாந்த் விளையாடுகிறது. இந்நிலையில் தான் டி20 தொடரில் ஒரு போட்டி மழையினால் தடைபட்டு அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்றாலும் அதற்கடுத்து சுதாரித்து கொண்ட நியூசிலாந்து அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது.
இந்த போட்டியை தொடர்ந்து இந்தியாவில் வரும் ஆக்டோபர் மாதம் நடக்கும் உலகக்கோப்பை போட்டிக்கும் தயாராகும் வகையில் 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டியில் எப்படியோ போராடி வென்ற பாகிஸ்தான், 2 விது போட்டியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு செய்தது.

வைரல் வீடியோ :
அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து நல்ல துவக்கத்தை கொடுக்க திடீரென ஏதோ சரியிலாததை உணர்த்த அம்பயர்கள் போட்டியை பதில் நிறுத்தி கலந்துரையாடினார்கள். பின்னர் கிரிக்கெட் மைதானத்தின் 30 யார்டு அளவை அளந்த போதுதான் அது அதிகமாக இருப்பது அம்பயர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர் சரியாக 30 யார்டு தூரத்தை அளந்து அதனை குறிக்கும் வட்ட வடிவிலான துண்டுகளை பாகிஸ்தான் வீரர்களை வைத்தே சரிசெய்யதார்கள் அம்பயர்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 29, 2023
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் பார்வையாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளகி உள்ளனர். சதொச அந்த போட்டியில் வேர்ணனையாளர்களாக இருந்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை முன்வைத்தனர். கிரிக்கெட் தொடங்கியது முதல் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும் மைதானத்தின் உள் வட்டம் 30 யார்டு என்பது மட்டும் இன்னனும் மாறாமல் அப்படியே இருக்கிறது.
Cant place 30 yard circle properly and they want to Host Asia Cup 😀😀!! #PAKvNZ
— Rainbow Salt (@Rainbowsalts91) April 29, 2023
https://t.co/BPWcJzBcUW
They really changed the 30-yard circle during the match, that was hilarious! 😂 #PAKvNZ pic.twitter.com/7bKhKHgLdt
— Farid Khan (@_FaridKhan) April 29, 2023
அப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பல காலங்களாக பஸ்கிஸ்தான் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பையை தாங்கள்தான் 2023ல் நடத்துவோம் என்று பிரச்னை செய்து வருகிறது. ஆனால் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் திருப்பியளிக்காத நிலையில் தற்போது மீண்டும் யாரும் இதுவரையில் பார்த்திராத 30 யார்டு மாற்றம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளதினால் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவை பாகிஸ்தானை கடுமையான விமர்சித்து வருகின்றனர்.





