மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்த போட்டியில் தொடக்கத்திலேயே தடுமாறிய இந்தியா பின்னர் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடியாக விளையாட எளிதான வெற்றி பெற்றது. இதனால் வித்தியாசமான பரிசோதனைகளை செய்யும் ராகுல் டிராவிட் மீது நெட்டிசன்கள் பாலரும் குற்றசாட்டுகளை வைத்தனர்.
மேலும் பாஸ்கிதான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட் கூட இந்தியாவின் இந்த தொடர்ச்சியான தோல்விக்கு காரணம் ஆசிய கோப்பையிலும் உலக கோப்பையிலும் எதிராளிகளாம் என்றும், யார் எதிராணியாக இருந்தாலும் தோல்வி என்பது மன அளவில் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பலர் இந்தியாவின் திட்டம் என்பது சரியாக செல்லவில்லை என்றும், அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளை பார்க்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆர்.பி.சிங் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு வளங்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார். முகேஷ் குமாரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகமும் கேப்டனும் யோசிக்க வேண்டும். தற்போது இந்திய அணிக்கு இருக்கும் திட்டத்தில் முகேஷ் குமாரின் ரோல் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. ஒரு பந்துவீச்சாளராக அவர் போட்டியின் போது அணிக்கு என்ன கொண்டு வருகிறார் என்பது வரையறுக்கப்படவில்லை.

எனது கருத்துப்படி வேகப்பந்து வீச்சாளருக்கு புதிய பந்தில் சில ஓவர்களைக் கொடுக்க வேண்டும். இதுதான் எனக்கு வரும்தாம் அளிக்கிறது. பின்னர் டெத் ஓவர்களின் போது. ஏனென்றால் அவருக்கு ஓவர்கள் என்பது தரப்படவே இல்லை. முகேஷ் குமார் தன்னுடைய எந்த திறமையையும் வெளிப்படுத்த அவர்கள் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.
ஆவர டெத் ஓவர்களில் போது மிகவும் திறமையாக பந்துகளை வீசுகிறார். அநேகமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்திய அணி நிர்வாகமும் கேப்டனும் அவருக்கு டெத் ஓவர்களில் வீச வாய்ப்பு ஒடுக்கப்படும் என்று கூறினார்.. அதனால்தான் அவர் இறுதிவரை பந்துவீசுவதைக் காண முடிந்தது. அவருக்கு தரப்பட்ட ரோலை அவர் சரியாக செய்தார். ஆனால் கடந்த டி20 அப்போட்டியில் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசினார் என்று கூறியுள்ளார் ஆர்பிசிங்.




