இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சில மாநிலங்களில் MPL, KPL போன்ற லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டிலும் TNPL போட்டியானது நடைபெற்று வருகிறது. கடந்த 12 அம தேதி தொடங்கிய இந்த போட்டியானது அடுத்த மாதம் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆண்களுக்கு தற்போது நடத்தப்படும் லீக் போட்டிகள் போன்றே பெண்களுக்கு லீக் போட்டியானது தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது மகளீருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை ஃப்ரேயர் நிறுவனத்துடன் இணைந்து நடத்த இருக்கிறது. இந்த போட்டியானது மூன்றாவது ஆண்டாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக் விளையாடும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்போட்டியில் 15 முதல் 23 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகள் விளையாட இருக்கின்றனர்.
இந்நிலையில் முதலில் டி20 போட்டிகளானது வரும் ஜூன் 26ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரையில் நடைபெறுகிறது. இதனனை தொடந்தது 50 ஓவர் போட்டிகளானது அடுத்த மாதம் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து 50 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகளில் சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ், புளு அவென்ஜர்ஸ், பர்பிள் பிளாசர்ஸ், கிரீன் இன்வாடெர்ஸ், எல்லா சேலஞ்சர்ஸ், ஆரஞ்சு டிராகன்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், பிங்க் வாரியர்ஸ் என 8 அணிகள் மொத இருக்கின்றனர்.

இந்த 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்த பிரிவுகளை உள்ள 4 அணிகள் ஒருவருடன் ஒருவர் ஒரு தலா போட்டியில் விளையாடுவார்கள். இறுதியில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட அணி பைனலில் மோதுவார்கள். இந்த டி20 லீக் போட்டியானது ஒரு நாளுக்கு காலை 8.45 மணியளவில் ஒரு போட்டியும், 12.45 மணியளவில் இரண்டாவது போட்டியும் நடைபெறும். இதனை தொடர்ந்து 50 ஓவர் போட்டிகளானது நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிகளும் ஒரு நாளில் இரண்டு ஆட்டங்களை விளையாட திட்டமிட்டுள்ளார். காலை 9.00 மணிக்கு முதல் போட்டியும், 9.30 மணிக்கு இரன்டாவது போட்டியும் தொடங்கும். மேலும் இந்த போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அந்த வீரர்கள் தமிழ்நாட்டின் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்ய படுவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.





