டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் நேற்று ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவு தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்ற அதிக போட்டிகள் இருந்தது. குறிப்பாக சில அணிகள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி பின்னர் நாக் அவுட் போட்டிகள் நெருங்கும் போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் கூட வரமுடியாமல் இருந்தார்கள்.

மறுபுறம் எல்லா சீசன்களிலும் ஏதேனும் இரண்டு அணிகள் 9 மற்றும் 10 இடத்தில் இருப்பது போல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இருந்தது. இதில் டெல்லி அணியின் விளையாட்டானது அதிகமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக 14 போட்டிகளை விளையாடிய டெல்லி பந்து 5 வெற்றிகளை பதிவு செய்து 9வது இடத்தில் இருந்தது. ஆனால் கங்குலி, ரிக்கி பாண்டிங் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அந்த அணியில் இருந்து டெல்லி பிளே ஆஃப் கூட தண்டமுடியால் தவித்து வந்தது.
ட்விட் பதிவு :
இந்நிலையில் நேற்று டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டுள்ளார். அந்த பதிவில் “அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. டெல்லி கேபிட்டல்ஸ் அணி கங்குலியுடனும், ரிக்கி பாண்டிங்குடனும் இணைந்து நானும் கிரணும் கடுமையாக உழைத்து வருகிறோம். கண்டிப்பாக எங்களுடைய அணியை உச்ச இடத்திற்கு கொண்டு செல்வோம் என்று பதிவிட்டிருந்தார்.

மோசமாக தோல்வியடைந்த டெல்லி :
இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியின் போது டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்து இருந்தார். சொல்லப்போனால் அவர் சிறபபிக்கவே டெல்லி அணியை வழிநடத்தினார். ஆனால் அவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டில் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமில்லாமல் இந்திய அணியிலும் அவரினால் விளையாட முடியாமல் போனது. இது இந்தியாவிற்கு உலகக்கோப்பை சாம்பியன் ஷிப் போட்டியின் போது பெரும் இடியாக இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.
மேலும் டெல்லி அணியின் நட்சத்திர வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் ரிலீ ரோசோவ் உள்ளிட்ட சில பெரிய வீரர்களால் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களுடன் வர முடியாமல் திணறியதால் டெல்லியின் செயல்திறன் பெரிதளவு பாதிக்கப்பட்டது. அதோடு 2023 சீசனில் அக்சர் படேலின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தும் அவரை விரைவாக பேட்டிங் அனுப்பாத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளக்கியது.

குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 2019 மற்றும் 2021 க்கு இடையில் டெல்லி கேபிடல்ஸ் தொடர்ந்து மூன்று முறை ஐபிஎல் பிளேஆஃப்களுக்குள் நுழைந்தது, அதுமட்டுமல்லாமல் 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி முன்னேறியது. அதன்பிறகு அவர்களால் பிளேஆஃப்களுக்குச் செல்ல முடியவில்லை. மேலும் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியானவரா என்பதும், உதவி பயிற்சியாளர்களான ஷேன் வாட்சன் மற்றும் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொள்வார்களா? இல்லையா? என்பதும் கேள்விக்குறிதான்.





