வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடையில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. அதாவது இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பரபரப்பை விளையாடி பின்னர் 2 விக்கெட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் முதல் நாளிலேயே டிக்ளர் கொடுத்தது. மேலும் தங்கள் பாஸ் பால் முறையில் விளையாடுவதாகவும் அதற்கு முன்னரே பயிற்சியாளரும் கூறியிருந்தார்.

ஆனால் அப்படி டக்ளர் கொடுத்தது பெரும் தவறாக சென்று முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவியத்தினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதனையடுத்து இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை எப்படியோ கட்டுப்படுத்தி வெற்றி பெரும் நிலையில் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா சர்ச்சையான முறையில் ஆட்டமிழக்க செய்த்து அந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைய மிகப்பெரிய காரணமாக இருந்ததால் அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதற்க்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் அப்படி செய்து வெற்றி பெற விரும்பவில்லை என்று கூறினார். இதனையடித்து பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்திரலியே ஊடகங்கள் கேப்டன் பேன் ஸ்டோக்ஸை குழந்தை போல வர்ணித்து “விதிமுறை தெரியாமல் குழந்தை போல பேசாதீர்கள் வாயில் பாட் டப்பாவை வைத்து கொள்ளுங்கள் என்று விமர்சித்தது.

இதற்க்கு பதிலடியாக ஆஸ்திரேலியா ஊடகம் ஜானி பேர்ஸ்டோவை ஆட்டமிழக்க செய்த அலெக்ஸ் கேரி லண்டனில் முடி வெட்டி விட்டு பணம் கொடுக்கவில்லை என்று சர்ச்சையை கிளப்ப, அஸ்திரேலிய வீரர் ஸ்மித் அதற்கு பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று இங்கிலாந்து ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் லித்துனியாவில் 2023 நாட்டோ உலக மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு பற்றி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பென்ஸி ஆகியோர் விவாதித்தனர்.
I caught up with Prime Minister @RishiSunak to discuss progress with AUKUS, technology transfer and economic challenges, as well as the Australia-UK Free Trade Agreement. pic.twitter.com/5FAAsWGMYL
— Anthony Albanese (@AlboMP) July 11, 2023
வைரல் வீடியோ :
அந்த விவாதத்தின் முடிவில் ஆஷஸ் தொடரில் இப்போதும் நாங்கள் தான் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறோம் என்ற வாசகத்தை காட்டி ஆஸ்திரேலிய பிரதமர் அல்பென்ஸி கிண்டலை துவக்கினார். அதற்காக சிரித்த ரிஷி 3வது போட்டியில் வென்ற புகைப்படத்தை காட்டி அவருக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு அசராத அல்பென்ஸி 2வது போட்டியில் ஜானி பேர்ஸ்டோ வெளியேறிய புகைப்படத்தை காட்டி மீண்டும் வம்பிழுத்தார்.
ஆனால் அதற்கு நான் “சேண்ட் பேப்பர்” கொண்டு வரவில்லை என்று பதிலளித்த ரிஷி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை பதிலடியாக ஆஸ்திரேலிய பிரதமருக்கு கொடுத்தார். மொத்தத்தில் அந்த சந்திப்பின் இதற்கு மேலும் ஒன்றும் நடக்காமல் அமைதியாக முடிந்து இருவரும் கை கொடுத்துக் கொண்டனர். இந்நிலையில் ஆஷஸ் தொடரின் போட்டியானது வரும் ஜூலை 19ஆம் தேதி துவங்க இருக்கிறது. இது மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.





