தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் நேற்று நடந்த நான்காவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பா11சி திருச்சி அணிகளுக்கு இடையே கிரிக்கெட் ஆடுகளத்தில் அரிதான நிகழ்வு ஓன்று நடந்துள்ளது நடந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்நாடு பிரீமியர் லீக். இதுவரையில் 6 சீசன்கள் நடந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது 7வது சீசன் நடந்து வருகிறது. ஏற்கனவே அணைத்து போட்டிகளில் முடிவடைந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் அரையிறுதி சுற்றில் விமல் குமார் தலைமையிலான திண்டுக்கல் அணியும், அருண் குமார் தலைமையிலான நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸை வென்று பந்துவீச்சை முடிவு செய்தது .நெல்லை ராயல்ஸ் கிங்ஸ்.
இதனால் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க வீரரான கப்டன் விமல் குமார் வெறும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த சிவம் சிங் மற்றும் பூபதி குமார் இருவரும் இணைத்து பொறுமையாக ரன் ரேட்டை உயர்த்தினார். இதில் சிவம் 46 பந்துகளை 76 ரன் எடுத்திருக்கும் போது லக்ஷய் ஜெனிடம் ஆட்டமிழந்தார். அதே போல அவருடன் கைகோர்த்து விளையாடிய பூபதி 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த நிலையில் வாரியரிடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த திண்டுக்கல் டிரகன்ஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 என்ற பலமான ஸ்கோரை வைத்தது திண்டுக்கல். இந்நிலையில் 186 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியானது இந்த ஸ்கோரை எட்ட கஷ்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் ஓவரிலேயே 16 ரன்களை விளாசினார்கள் நெல்லை அணியின் தொடக்க வீரர்கள்.

இதனையடுத்து 4வது ஓவரில் கேப்டன் அருண் கார்த்திக் அதிர்ச்சி கொடுத்து ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி நிலையாக நின்று 44 பந்துகளில் 73 ரன்களை விளாசினார். இந்நிலையில் கடைசி 2ஓவர்களில் (12 பந்துகளில்) 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாடிய ரித்திக் ஈஸ்வரன் வெறும் 5 பந்துகளில் 25 ரன்களை விளாசினார், அவரோடு குருசாமியும் 7 ரன்களை எடுத்தார். இதனால் ஒரே ஓவரில் 33 ரன்கள் வந்ததால் மொத அழுத்தமும் அப்படியே குறைந்தது.

இந்நிலையில் இறுதியில் ஒரு பந்தில் 1 ரன் தேவைப்படும் நிலையில் குருசாமி சிக்ஸர் அடித்து நெல்லை அணியை வென்றி பெற செய்தார். இதனால் நெல்லை அணியானது நாளை நடக்க இருக்கும் TNPL 2023 போட்டியில் ஏற்கனவே பைனல் சென்ற கோவை கிங்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த பைனல் போட்டியானது இருவருக்குமே முதல் கோப்பையை பெற்று தரும் என்பதினால் சுவாரசியத்ரிக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.




