சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் LSG vs RCB போட்டியின் போது மைத்தனத்தில் விராட் கோலிக்கும் லக்னோ அணியை சேந்த நவீன் உல் ஹக் என்ற ஆப்கானித்தான் வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் மென்டர் கவுதம் கம்பீர் தலையிட்டதால் அது பெரிதாக வாக்குவாதமாக மாறியது. பின்னர் சில சோசியல் மீடியா சண்டைகளும் அவ்வப்போது நவீன் உல் ஹக் மற்றும் கோலிக்கு இடையே சென்றது.

ஆனால் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் கவுதம் கம்பீர் கூறுகையில் “கிரிக்கெட் மைதானத்தில் எனக்கு நிறைய சண்டைகள் உள்ளன, நான் எப்போதும் அவற்றை கிரிக்கெட் மைதானத்திற்குள் மட்டுமே வைத்துக்கொள்கிறேன் என்று தோனி மற்றும் கோலியுடன் இருக்கும் விஷயம் மைத்தனத்திற்குள் இருப்பது மட்டும்தான். அவர்கள் அணி வெற்றி பெற விரும்புகிறார்கள். அது களத்தில் இருக்க வேண்டும். நான் இந்தியாவுக்காக விளையாடிய ஒவ்வொரு வீரரையும் மதிக்கிறேன் என்று கூறினார் கம்பீர்.
அகமது ஷேசாத் கூறியது :
கம்பீர் இப்படி கூறியது இவர்களுக்கு இடையே உள்ள விவகாரம் குறித்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வாய்த்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத் இடஙக விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” அந்த விஷயம் மனதிற்கு வருத்தமாக இருந்தது. நான் மைத்தனத்தில் நடந்தை பார்த்ததில் இருந்து அங்கே என்ன நடந்திருக்கும் என்பது எனக்கு தெரியும்.

அபிகானிஸ்த்தான் வீரருக்கும் விராட் கோலிக்கும் இடையே நடந்த விவகாரத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் கவுதம் கம்பீர் ஏன் தன்னுடைய நாட்டில் இருக்கும் ஒரு வீரரை குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. அதுவும் உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியிடம் கம்பீர் அப்படி நடந்த கொண்டது சரி கிடையாது. எங்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதால் பார்வையாளர்கள் என்ற எங்கள் கருத்து மாறிவிட்டது.
இதனை பார்க்கும் போது கம்பீர் பொறாமையின் காரணமாக செய்கிறார் என்பதை போல தெரிகிறது. ஐபிஎல்-க்கு என்று ஒரு பிராண்ட் இருக்கிறது. இங்கு எந்த இந்திய சூப்பர் ஸ்டாரையும் யாரேனும் ஏதாவது சொன்னால் அது பெரிய விஷயமாக மாறிவிடுகிறது. குறிப்பாக நவீன் மற்றும் விராட் சம்பவத்தை கூறலாம். அது டிரெஸிங் ரூமுக்குள்ளும் சென்று ஒரு வீரரின் மீது வெறுப்பு வர காரணமாக மாறுகிறது.

நாம் அனைவரும் முன்னரே பார்த்திருப்போம் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது. இதனால் விராட் கோலியின் மீது உள்ள பொறாமையால் ஏதாவது ஒரு பிரச்னை கிடைக்காத என்று தேடுகிறார் என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரையில் யாரும் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பார்த்ததில்லை. அவர் ஒரு கிரிக்கெட் லெஜெண்ட், அவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.

இந்த சம்பவதரிக்கு பிறகு கம்பீர் அந்த சம்பவம் குறித்து பேசினார். கடந்த காலத்தில் தன்னுடைய ஆட்டநாயகன் விருதை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டது குறித்தும் பேசினார். நான் கேட்கிறேன் “விராட் உங்களிடம் இருந்து அந்த விருதை கேட்டாரா? அல்லது இந்த விருதை கொடுப்பதினால் கோலியை வாழ்நாள் முழுவதும் விமர்சிக்கும் வாய்ப்பை பெற்றீர்களா? அது அப்படி கிடையாது என்றார் அகமது ஷேசாத். இந்த சம்பவத்திற்கு முன்னர் கூட கடந்த 2015 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு கம்பீருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடதக்கது.





